meta property="og:ttl" content="2419200" />
உலகத் தர தினம் நவம்பர் மாதம் இரண்டாவது வியாழன் தோறும் நடைபெறும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். இது நாம் செய்யும் வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சிறந்த தயாரிப்புகள், சேவைகள், தொழில்கள் மற்றும் கல்வி போன்ற பல்வேறு விதமான விஷயங்களில் சிறந்து விளங்குவதற்கான நல்ல நடைமுறைகளை இது ஊக்குவிக்கிறது. தர மேலாண்மைக்குத் தேவையான அம்சங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தரக்கொள்கை மற்றும் நோக்கங்கள்: ஒவ்வொரு நிறுவனமும் தனது உறுதிப்பாட்டை வரையறுக்கும் தெளிவான தரக் கொள்கைகளை நிறுவ வேண்டும். ஒட்டுமொத்த வணிக இலக்குகளுடன் அதை அடையத் தேவையான நோக்கங்களை அமைத்துத் தரமான விளைவுகளை அடைவதற்கான முயற்சிகளை நிறுவனங்கள் எடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர் திருப்தி: எந்த ஒரு நிறுவனத்தின் முதன்மையான கவனமும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைப் புரிந்துகொண்டு பூர்த்தி செய்யும்போது வருவாய் அதிகரித்து வாடிக்கையாளர்களையும் திருப்தி செய்கிறது. வணிக செயல்முறைகள், தயாரிப்புகள் மிகவும் திறமையானதாக இருக்கும்போது தரம் நன்றாக இருக்கும். அதிகமான வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை சேகரித்து பகுப்பாய்வு செய்து மேம்படுத்துதல் வாடிக்கையாளர் மற்றும் நிறுவனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை உருவாக்கும்.
தலைமைத்துவ அர்ப்பணிப்பு: நிறுவனங்களில் பணிபுரியும் தலைவர்கள் தலைமைத்துவ அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். சிறந்த தலைமை அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே ஒற்றுமை மற்றும் இணக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஊழியர்களின் திறனை முழுமையாக கண்டறிந்து, தெளிவான நிறுவன இலக்குகளையும் நோக்கங்களையும் அமைப்பதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதனால் பணியாளர்களும் ஊக்குவிக்கப்பட்டு உற்பத்தி திறன் மற்றும் விசுவாசத்தை கணிசமாக மேம்படுத்துவார்கள். தரமான கலாசாரத்தை மேம்படுத்துவதிலும் முன்மாதிரியாக வழி நடத்துவதிலும் தரமான பொருட்களை உற்பத்தி செய்யவும் தங்கள் செய்யும் வேலை தரமுடன் இருக்கவும் வலியுறுத்த வேண்டும்.
பணியாளர் மேம்பாட்டுப் பயிற்சி: தர மேலாண்மை முயற்சிகளில் பணியாளர்களை தீவிரமாக ஈடுபடுத்துவதன் மூலம் தரத்தை உயர்த்தி நிறுவனத்தின் நற்பெயரை காப்பாற்ற முடியும். தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் பணியாளர்களை ஆயத்தப்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு: தர நிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யவும் மேம்படுத்துவதற்கான பகுதிகளை அடையாளம் காணவும் வழக்கமான தர தணிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளை நடத்த வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் தரமான முன்முயற்சிகள் பற்றி தெரிவிக்கப்படுவதை உறுதி செய்து அவர்களுடைய யோசனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தரமான கொள்கைகள் நடைமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பான திறந்த தொடர்புகளை அமைக்க வேண்டும்.
பொறுப்புணர்வு: ஊழியர்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். முடிவெடுப்பதிலும் அவர்களை ஈடுபடுத்தும்போது உற்பத்தி இன்னும் சிறப்பாக இருக்கும். அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது மிக முக்கியம். முழுமையான மனதுடன் ஊழியர்கள் வேலையில் ஈடுபடும்போது அவர்கள் பொறுப்புணர்வுடன் வேலை செய்வார்கள்.
தர உத்தரவாதம்: ஒரு குறிப்பிட்ட சேவை அல்லது தயாரிப்பு வாடிக்கையாளரை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான நம்பகத்தன்மையுடன், தர உத்திரவாத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தொடர்ந்து புதிய செயல்முறைகளை உருவாக்கவும் புதிய சந்தை சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் செயல்பட வேண்டும்.
உறவு மேலாண்மை: உறவு மேலாண்மை என்பது சப்ளையர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்குவதாகும். நிறுவனம் விநியோகச் சங்கிலி செயல்முறையை நன்கு நிர்வகிக்க வேண்டும்.