‘மிஸ்டர் நைஸ் கை சிண்ட்ரோம்’ என்றால் என்னவென்று தெரியுமா?

Do you know what is 'Mr Nice Guy Syndrome'?
Do you know what is 'Mr Nice Guy Syndrome'?https://www.menshealth.com

‘மிஸ்டர் நைஸ் கை சிண்ட்ரோம்’ (Mr. Nice Guy Syndrome) என்பது, பொதுவாக ஆண்களின் ஒரு நடத்தை முறையை குறிக்கிறது. பிறரின் நம்பிக்கை மற்றும் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி எல்லா விதத்திலும் நல்லவர்கள் போல தங்களை காட்டிக் கொள்வார்கள். இது போன்றவர்களின் பண்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. மோதலை தவிர்க்க விரும்புவார்கள்: பிறருடன் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல் போக்கை தவிர்க்க நைஸ் கை சிண்ட்ரோம் உள்ள ஆண்கள் தங்களது சொந்த உணர்வுகள் அல்லது தேவைகளை கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொள்வார்கள்.

2. பிறரிடம் ஒப்புதல் தேடுவது: பிறருக்குப் பிடித்த மாதிரி நடந்து கொண்டு, தங்களது உண்மை இயல்பை மறைத்துக் கொண்டு அவர்கள் பிறரிடம் இருந்து அதற்கான ஒப்புதலை எப்போதும் தேடுகிறார்கள்.

3. மக்களை மகிழ்விப்பவர்கள்: தங்கள் தேவைகளை விட, மற்றவர்களின் தேவைகள் மற்றும் ஆசைகளை முதன்மைப்படுத்துகிறார்கள். அதற்காக தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை தியாகம் செய்கிறார்கள். பிறரின் ஆசையை நிறைவேற்ற நிறைய மெனக்கெடுவார்கள்.

4. முடியாது என்று சொல்ல மாட்டார்கள்: பிறருடைய கோரிக்கைகளுக்கு எப்போதுமே, இல்லை, முடியாது என்று எதிர்மறையாகக் கூறவே மாட்டார்கள். அது அவர்களை வருத்தப்படுத்தும் அல்லது ஏமாற்றம் அடையச் செய்யும் என்று அஞ்சுவார்கள். எனவே, அவர்கள் என்ன செய்யச் சொன்னாலும் அதுபோல செய்யத் தயாராக இருப்பார்கள்.

5. உறுதியற்ற தன்மை: எப்போதும் பிறரை திருப்திப்படுத்த செயல்பட்டுக் கொண்டு இருப்பதால் அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் எப்போதும் இவர்களுக்கு ஒரு விதமான விரக்தி மற்றும் மனக் கசப்புக்கு ஆளாகிறார்கள்.

மிஸ்டர் நைஸ் கை சிண்ட்ரோமில் இருந்து வெளிவருவது எப்படி?

1. பிறர் பார்வையில் மட்டும் நல்லவராக இருப்பது மட்டுமே ஒரே வழி என்கிற அடிப்படை நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டும். பிறருக்கு முன்னுரிமை தருவதை விட, தன்னுடைய நல்வாழ்வுக்கு தேவைப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்தியப் பெண்!
Do you know what is 'Mr Nice Guy Syndrome'?

2. தேவைப்படும்போது இல்லை, முடியாது என்று குற்ற உணர்ச்சியின்றி சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய அங்கீகாரத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. தன்னைத்தான் மதித்தல் மிகவும் முக்கியம்.

3. தன்னுடைய முயற்சிகளை வளர்த்து முன்னேற்றத்தை அடைய தொடர்ந்து முயல வேண்டும். வெற்றிகளைக் கொண்டாட வேண்டும். அப்போது பிறர் பார்வையில் மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com