உயில் எழுதும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

Writing a will
Writing a willhttps://tamil.goodreturns.in

மக்குப் பின்னால் நம் குடும்பம் சொத்து பிரச்னையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உயில் எழுதுவது மிகவும் அவசியம். உயில் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். இதன் மூலம் நம்முடைய சொத்துக்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடலாம். இதனால் ஒருவரின் சட்டபூர்வமான வாரிசுகளின் உரிமைகளை பாதுகாக்கவும், சொத்து தொடர்பான தகராறுகளை தடுக்கவும், நாம் விலக்க விரும்பும் நபர்களை சொத்தில் உரிமை கோருவதிலிருந்து தடுக்கவும் இது உதவும்.

உயில் உங்கள் மைனர் குழந்தைகள் மற்றும் வளர்க்கும் செல்லப் பிராணிகளை யார் கவனித்துக்கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்கவும் உதவும். உயிலுக்குக் குறிப்பிடப்பட்ட வடிவம் எதுவும் இல்லை என்றாலும் சட்டப் பார்வையில் முக்கியமான விவரங்களை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அசையும் சொத்து, அசையா சொத்து ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு அவற்றை பெறும் நபர் அல்லது நிறுவனத்தின் பெயரை குறிப்பிட வேண்டும். ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும். ஆனால், உயில் அப்படி அல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம் அல்லது அவர்கள் விரும்பும் மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம்.

இருந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. ஒருவர் தான் உரிமை கொண்டாடும் அத்தனை சொத்துக்களையும் உயிலாக எழுதி வைக்க முடியாது. சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுத முடியும். அதுவும் தன்னுடைய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துதான் என்பதை உறுதிப்படுத்தி கொண்டால் மட்டுமே எழுதும் உயில் செல்லுபடியாகும். தந்தை வழிவந்த பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது. அந்த சொத்துக்கு வாரிசுகள்தான் உரிமை கொண்டாட முடியும்.

உயில் எழுதும்போது இரண்டு சாட்சிகள் கையெழுத்து வேண்டும். சாட்சி கையெழுத்து போடும் நபர்கள் உயில் மூலம் பயன் பெறும் நபர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்த உயில் செல்லாமல் போகும். வயதான நபர்களை சாட்சி கையெழுத்திட வைப்பதை தவிர்ப்பது நல்லது. உயில் எழுதியவுடன் பதிவு செய்வது நல்லது. இதனால் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பதிவு செய்ததை நகலெடுத்து ஒன்றை ரெஜிஸ்டர் அலுவலகத்தில் கொடுப்பது நல்லது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதிய உயில்தான் செல்லும்.

இதையும் படியுங்கள்:
சிதம்பர குஞ்சிதபாதம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
Writing a will

உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. எதில் எழுதினாலும் செல்லும். ஒரு சாதாரண பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு இருந்தால் கூட சட்டப்படி செல்லும். இருந்தாலும் முறைப்படி உயில் எழுதுவதாக இருந்தால் பேப்பரில் ஸ்டாம்ப் ஒட்டி உயிலை எழுதி இரண்டு பேர் சாட்சி கையெழுத்து போட்டு அதை ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்வது நல்லது.

உயிலை எழுதும் நபரின் பெயர், வயது, முகவரி மற்றும் அடையாள எண்கள், ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவை மிகவும் அவசியம். அத்துடன் அதை பெறுபவரின் முழு பெயரும், அடையாள எண்கள், ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவையும் அவசியம். வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில் பங்கு இருக்கும் என்று கிடையாது. அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோர முடியாது. எனவே, உயில் எழுதும்பொழுது மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயிர் எழுதுவதுதான் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com