'தூக்க முடக்கம்' என்றால் என்ன தெரியுமா? அதைத் தவிர்க்க உதவும் 5 வழிகள்!

தூக்க முடக்கம்
தூக்க முடக்கம்
Published on

‘தூக்க முடக்கம்’ (Sleep Paralysis) என்பது இரவில் தூங்க ஆரம்பிக்கும் முன்பும் தூங்கி எழும்போதும், சில வினாடிகள் முதல் ஒன்றிரண்டு நிமிடங்கள் வரை உடலின் எந்தப் பகுதியையும் அசைக்க முடியாத நிலை ஏற்படுவதாகும். பலருக்கு இது ஒரு பயப்படும்படியான அனுபவமாக இருக்கலாம். இதில் பயப்படும்படி எதுவும் இல்லை என்றாலும், இது ஒரு மன அழுத்தம் தரக்கூடிய நிலையாகவே உள்ளது. ஸ்லீப் பராலிசிஸை குறைக்க உதவும் ஐந்து ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. முறையற்ற ஸ்லீப் சைக்கிளை பின்பற்றுவோருக்கு ஸ்லீப் பராலிசிஸ் வரும் வாய்ப்பு அதிகம். எனவே, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதையும், குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து கொள்வதையும் பழக்கமாக்கிக்கொண்டு அதையே தவறாமல் பின்பற்றினால் இந்த மாதிரியான கோளாறு  ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

2. முதுகுப் பக்கம் முழுவதும் அடியில் இருக்கும்படி படுத்துக்கொள்வது ஸ்லீப் பராலிசிஸை வரவழைக்கும் காரணிகளில் ஒன்றாகும். எனவே, பக்கவாட்டில் திரும்பிப் படுத்துத் தூங்க ஆரம்பிப்பது ஸ்லீப் பராலிசிஸ் வரும் ஆபத்தைக் குறைக்கும்.

3. மன அழுத்தம் காரணமாகவும் ஸ்லீப் பராலிசிஸ் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, படுக்கைக்குச் செல்லும் முன்பு மனதுக்குப் பிடித்த நல்லதொரு புத்தகத்தைச் சிறிது நேரம் வாசித்துவிட்டு செல்லலாம் அல்லது ஷவரில் ஒரு சுகமான குளியல் போட்டு விட்டு உறங்கச் செல்லலாம். இந்த இரண்டு பழக்கமும் மனதை அமைதிப்படுத்தி பிரச்னை இல்லாமல் தூக்கத்தை வரவழைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ராஜஸ்தானின் தனித்துவமிக்க 5 வகை மினியேச்சர் ஓவியங்கள்!
தூக்க முடக்கம்

4. ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் போன்ற டிஜிட்டல் கருவிகளை உறங்கச் செல்வதற்கு முன்பு வரை உபயோகித்துக் கொண்டிராமல் அரை மணி நேரத்திற்கு முன்பே அமைதி நிலையில் வைத்து விடுவது ஸ்லீப் பராலிசிஸ் வரும் அபாயத்தைத் தவிர்க்கவும், நல்ல தூக்கத்திற்கு எதிராக வினை புரிவதைத் தடுக்கவும் உதவும். இம்மாதிரியான கருவிகளை படுக்கை அறைக்கு வெளியிலேயே வைத்து விடுவது நலம் தரும்.

5. படுக்கை அறையின் உள்ளே சுற்றுச் சூழலை அமைதியானதாகவும் வசதி தரக்கூடியதாகவும் அமைத்துக்கொள்வது மிக முக்கியம். இதனால் ஸ்லீப் பராலிசிஸ் வரும் அபாயமின்றி ஆழ்ந்த, அமைதியான தூக்கம் பெறுவது சாத்தியமாகும்.

தூக்க முடக்கம் என்பது ஒரு வகை பாராசோம்னியா (Parasomnia)வாகும். இதை நினைத்து அதிகம் அச்சப்படாமல் இருந்தாலே அதன் தாக்கத்திலிருந்து தப்பி விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com