பெண்களுக்கு ஏன் வெட்கத்தில் கன்னம் சிவக்கிறது தெரியுமா?

Blushing
Blushing
Published on

பொதுவாக பெண்கள் வெட்கப்படும்போது கன்னங்கள் சிவந்து கூடுதல் அழகுடன் தெரிவார்கள். வெட்கப்படும்போது உடலில் என்ன நடக்கும்? ஏன் கன்னங்கள் சிவக்கின்றன? என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?

பெண்கள் கோபப்படும்போதும், வெட்கப்படும்போதும் கன்னங்கள் சிவக்கும். அப்படி கன்னங்கள் சிவக்கும்போது அவ்வளவு அழகாக தெரிவார்கள். இந்த அழகை கவிஞர்கள் பல உவமைகளைக் கொண்டு வர்ணிப்பார்கள்.

அதுவும் குறிப்பாக டீனேஜ் பெண்களுக்கு சற்று கூடுதலாகவே கன்னங்கள் சிவக்கும். அது ஏன் அப்படி சிவக்கிறது என்று நெதர்லாந்தை சேர்ந்த அம்ஹர் டாம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இதனை எப்படி ஆராய்ச்சிப்பது? எப்படி அவர்களை வெட்கப்பட வைப்பது? என்று கலந்தாலோசித்தினர்.

இந்த ஆராய்ச்சியில் 40 வயது பெண்களை அழைத்து ஆராய்ச்சி செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதேபோல் காதல் சினிமா பாடல்களை தேர்ந்தெடுத்து, அந்த பாடல்களை ப்ளே செய்து , அவர்களையும் சேர்ந்து பாட சொன்னார்கள். அவ்வாறு பாடும் போது அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் பாடல்களை பாடும் போது கன்னங்கள் தானாகவே சிவந்ததைக் கண்டனர்.

இதுபோன்ற விஷயங்களை கூர்ந்து கவனித்தோமானால், அப்படி மாறுவதைப் பார்க்கலாம். அதனைப் பார்க்கும்போது அப்படியொரு வியப்பு ஏற்படும்.

அந்த பெண்கள் வெட்கப்படும்போது கன்னங்கள் சிவப்பதைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், பிரம்மித்து அப்படியே நின்றனர். ஏனெனில், பாடும்போது அந்த கன்னங்கள் அப்படியே சிவப்பது ஆராய்ச்சியாளர்களின் கண்களில் பிரதிபலித்தது. கூச்சத்தின் முக்கிய பங்கான வெட்கத்தை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

இதையும் படியுங்கள்:
திருமண சங்கீத் வைபவத்தில் பெண்கள் அணியும் லேட்டஸ்ட் ஃபேஷன் உடைகள்!
Blushing

பின் அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. இது அவர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை உண்டு செய்தது. ஏனெனில் கன்னங்கள் சிவப்பது ஏன் என்ற கேள்விக்கு, முழுமையான விடையை கண்டறிய முடியவில்லை என்றாலும், வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோஷம் என்ற காரணத்தை கண்டறிந்தது இந்த ஆராய்ச்சியின் முதல் வெற்றி கருதப்படுகிறது.

விரைவில் அதன் முழு காரணத்தையும் கண்டறிந்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com