உலகின் விலை உயர்ந்த மூலிகை எங்கு விளைகிறது தெரியுமா?

உலகின் விலை உயர்ந்த மூலிகை எங்கு விளைகிறது தெரியுமா?
Published on

மயமலைப் பகுதி முழுவதும் மருத்துவத் தாவரங்கள் நிறைந்துள்ளன. அந்தப் பகுதிகளில் பல பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாரம்பரிய சிகிச்சைக்காகவும், சிறிய மற்றும் பெரிய நோய்களுக்கான மருத்துவ நோக்கங்களுக்காகவும் உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படும் பல்வேறு தாவரங்கள் மற்றும் மூலிகைகள் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

உலகின் மிக விலை உயர்ந்த மூலிகை என்றால் அது ‘ஹிமாலயன் வயாக்ரா’ எனும் பூஞ்சை காளான் வகை தாவரம்தான். இதைப் பாரம்பரிய மொழியில், ‘கீடாஜாடி’ என்று அழைக்கிறார்கள். இளமையைத் திருப்ப உதவும் மூலிகை என்பதால் இதன் விலை மிகவும் அதிகம். ஆண்மை வீரியத்தை இது அதிகரிக்கும். ஆனால், இதை ஆபத்தான மூலிகை பட்டியலில் வைத்துள்ளனர். ‘கம்பளிப்பூச்சிபூஞ்சை’ அல்லது ‘இமாலயன் தங்கம்’ என்றும் அழைக்கப்படும் கார்டிசெப்ஸ் மூலிகை மருந்தான இதை, சேகரிக்கவே இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ முயல்வதாகக் கூறப்படுகிறது. சீனாவின் நடுத்தரக் குடும்பங்களில் இந்தப் பூஞ்சை சிறுநீரகக் கோளாறு முதல் ஆண்மைக் குறைவு வரை அனைத்து பிரச்னைகளையும் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

இந்திய மதிப்பில் இந்த மூலிகை ஒரு கிலோ சுமார் 15 முதல் 20 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இமயமலையில் பல கிராமங்களில் இந்த மூலிகையை சேகரித்து விற்பதே முக்கிய வருமானமாக உள்ளது. சீனா, நேபாளம், பூடான் பகுதிகளில் இந்த மூலிகை விளைந்தாலும், இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில்தான் அதிகமாக விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com