
பொதுவாகவே நாய்கள் அடிக்கடி செருப்பை கடிப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கான காரணம் குறித்து பலருக்கும் தெரியாது. இந்த பதிவில் அதை பற்றி பார்க்கலாம்.
நன்றியுள்ள ஜீவனாக கருதப்படும் நாய்கள், மனிதர்களுடன் அதிக நட்புடன் பழகும் விலங்காகும். நாய்களை போன்று எளிதில் மனிதர்களுடன் ஒன்றும் விலங்கு வேறு எதுவும் கிடையாது. நாய்கள் தன் வளர்ப்பவர்களுக்காக உயிரை கொடுத்த கதையை கூட கேட்டிருப்போம். அந்த அளவிற்கு நாய்கள் தங்களின் உரிமையாளரிடம் அன்பாகவும், அவர்களுக்கு நன்றியாகவும் வாழும். நாய்களின் பழக்கவழக்கங்களில் சிலவைகள் நமக்கு பிடிக்காது. அதில் ஒன்று தான் செருப்பு கடிப்பது. வீட்டில் வளர்க்கும் நாய்களே சொல் பேச்சை கேட்காமல் செருப்பை கடித்து குதறிவிடும். என்னதான் திட்டினாலும், அடிச்சாலும் அதை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
பல வீடுகளில் நாய்களுக்கு பயந்து பலரும் சில பொருட்களை கண்ணில் படாமல் வைத்திருப்பார்கள். ஆனால் அது ஏன் செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
நாய்கள் மனிதனின் காலணிகளை கடிப்பதற்கும், ட்ரஸை கடித்து கிழிப்பதற்கு காரணம் அது அந்த நபரை நேசிப்பதாக அர்த்தம். அவர்களின் நறுமணம் பிடித்ததால் அதை தக்க வைத்து கொள்ள இது போன்ற செயல்களின் ஈடுபடும். நாய்கள் ஒருவரை பிரிந்தால் வேதனையில் வாடும். இதனால் அவர்களின் பிரிவை சரி செய்வதற்காக இது போன்ற செயல்களின் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
சில சமயத்தில் கடுமையான பசியின் காரணமாகவும் நாய்கள் காலணிகளை கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. சில சமயம் நாய்களின் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அவை அடிக்கடி செருப்புகளை கடிக்கும். ஆனால், நாய்க்குட்டிகளோ விளையாட்டுக்காக செருப்புகளை கடிப்பது, துணிகளை கடித்து கிழிப்பது என்று விளையாட்டுத்தனமாக ஈடுபடும்.
எனவே நாய்கள் பாசத்தால் மட்டுமே இதை செய்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் செருப்பையை கடித்தால் அதற்கு உங்கள் மீது அன்பு அதிகம் என்று அர்த்தமாம். இதனால் இது போன்று நாய்கள் இனி செய்தால் அதை திட்டாமல் பதிலுக்கு பாசத்தை ஊட்டுங்கள். இந்த ஜீவராசிகள் போன்று எந்த உயிரினமும் இவ்வளவு பாசத்தை கொடுக்காது.