ஒமேகா ஆண்கள் ஆல்ஃபா ஆண்களை விட சிறந்தவர்களாகக் கருதப்படுவதன் காரணம் தெரியுமா?

Do you know why omega males are considered better than alpha males?
Do you know why omega males are considered better than alpha males?https://www.calmsage.com/

பொதுவாக அனைத்து ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவர் தன்னுடைய உடல் தோற்றத்தில் மட்டுமல்ல, குணாதிசயங்களிலும் ஒருவரை விட மற்றொருவர் வித்தியாசப்பட்டுதான் இருக்கிறார்கள். ஆண்களை ஆறு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

1. ஆல்ஃபா ஆண்கள்: இவர்கள் பெரும்பாலும் தலைவர்களாக இருப்பார்கள். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள். இவர்கள் எங்கிருந்தாலும், அந்த இடத்தின் சென்ட்டர் ஆப் அட்ராக்ஷன் ஆக இருப்பார்கள்.

2. பீட்டா ஆண்கள்: இவர்கள் தோழமை உணர்வுடன் விசுவாசம் மிக்கவர்களாகவும், பிறருக்கு அடங்கிப் போகிறவராகவும் இருப்பார்கள்.

3. ஒமேகா ஆண்கள்: இவர்கள் ஆல்ஃபா ஆண்களைப் போல பிறரை சார்ந்து இருக்க மாட்டார்கள். மிகுந்த தன்னம்பிக்கை மிக்கவர்கள். பிறர் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படவே மாட்டார்கள்.

4. காமா ஆண்கள்: இவர்கள் துணிச்சலான சாதனை புரிய தக்க செயல்களில் இருப்பார்கள். இவர்களுக்கு நிறைய கனவுகளும் ஆசைகளும் இருக்கும். பிறர் மேல் கருணையுடன் இருப்பார்கள்.

5. டெல்டா ஆண்கள்: இவர்கள் பிறருடன் பழகவே மாட்டார்கள். கடந்த கால அனுபவங்களினால் எப்போதும் கோபமாகவும் கசப்பு உணர்ச்சி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இந்த வகை ஆண்களை யாருக்கும் பிடிக்காது.

6. சிக்மா ஆண்கள்: இவர்கள் பிறரை விட ஒரு படி மேலே இருப்பதை விரும்புவார்கள். தன் புத்திசாலித்தனத்தாலும் வசீகரத்தாலும் பிறரை மிக எளிதாக கவர்வார்கள்.

ஆல்பா ஆண்களுக்கும் ஒமேகா ஆண்களுக்கும் உள்ள ஒற்றுமைகள்:

இருவருமே மிகுந்த தன்னம்பிக்கை மிக்கவர்கள். நேர்மையும், எடுத்த காரியத்தை சிறப்பாக செய்வதில் வல்லவர்கள். இருவருக்குமே மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி உண்டு. அதேசமயம் இவர்களுக்குள் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இருவருக்கும் உள்ள வேறுபாடுகள்:

உடல் தோற்றம்: ஆல்ஃபா ஆண்கள் தங்களுடைய உடல் தோற்றத்தை பற்றி மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இவர்களுடைய உடல் தோற்றம், ஆற்றலை பார்த்து கவரப்பட்டு எப்போதும் பிறரால் சூழப்பட்டு இருப்பார்கள். ஒமேகா ஆண்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றி அவ்வளவாக கவலைப்பட மாட்டார்கள். கலைந்த தலைமுடி, தாடி, அழுக்கு உடைகளுடன் இருப்பார்கள். தன்னுடைய புத்திசாலித்தனமும் நல்ல மனமுமே, தோற்றத்தை விட முக்கியம் என்று நினைப்பார்கள். அதனால் பிறரால் மோசமாக விமர்சிக்கப்பட்டு, சில சங்கடங்களை தன்னுடைய காதல் வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் சந்திப்பார்கள்.

லட்சியங்களும், தலைமைப் பண்பும்: ஆல்ஃபா ஆண்கள் பிறருடன் எளிதாக பழகக் கூடியவர்கள். பிறப்பிலேயே தலைவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் மிகுந்த தெளிவான லட்சியங்கள் இருக்கும். தங்களுடைய ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்த தயங்காதவர்கள். எப்போதும் பிறரை வசீகரிக்கும் தன்மை உடையவர்கள். எப்போதும் எதிலும் முதன்மை இடத்தில் இருப்பதையே விரும்புவார்கள். பிறருடன் போட்டியிட்டு வெல்வது மிகவும் பிடிக்கும்.

ஒமேகா ஆண்கள் சட்டென்று பிறரிடம் பழக மாட்டார்கள். இவர்களுக்கு வாழ்வில் லட்சியங்கள் அவ்வளவாக இருக்காது. பொறுப்புகள் என்பதே பிடிக்காது. பிறரை வழிநடத்த விரும்ப மாட்டார்கள். தானும் யாரையும் பின்பற்றவும் விரும்ப மாட்டார்கள். ஏதாவது சாதித்தாலும் அந்த சாதனைகளை மறைத்து விடுவார்கள். எப்போதும் பிறருடன் போட்டியும் போட மாட்டார்கள்.

நகைச்சுவை உணர்ச்சி: ஒமேகா ஆண்கள் வாழ்க்கையை வேடிக்கையாக எடுத்துக் கொள்வார்கள். தன்னைப் பற்றி நகைச்சுவையாக பேசுவார்கள். பிறரையும் சிரிக்க வைப்பார்கள். தன்னை தாழ்த்திக் கொண்டு கூட பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர்கள். மிகுந்த துயரத்தில் இருப்பவர்கள் கூட இவர்களது நகைச்சுவை பேச்சால் தனது கஷ்டங்களை மறந்து விடுவார்கள். ஆல்பா ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு இருந்தாலும் தன்னைப் பற்றி தாழ்வாக ஜோக்கடித்துக் கொள்ள மாட்டார்கள். பிறர் தன்னை வேடிக்கையாக டீஸ் செய்ய நினைத்தால் கூட தன்னுடைய தன்னம்பிக்கையால் அதைத் தடுத்து நிறுத்துவார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம்: ஆல்பா ஆண்களுக்கு எந்த இடத்தில் இருந்தாலும் இவர்கள்தான் பேசுபொருளாக இருக்க வேண்டும் எனவும், தன்னுடைய வெற்றியை பிறருக்கு உரக்க அறிவிப்பதிலும் ஆர்வம் அதிகம். தன்னுடைய அழகான தோற்றம், நடை உடை பாவனைகளால் பிறரை வசீகரிக்கவும், பதவி, புகழ், பணம், அந்தஸ்த்தை அடைய நிறைய மெனக்கெடுவார்கள்.

ஒமேகா ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் கவனிக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். வெற்றியை கூட பொதுவெளியில் அறிவிக்கவோ, தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். அனைவரும் சமம் என்ற கருத்தை உடையவர்கள். காதலில் மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள். ஆல்பா ஆண்களைப் போல அல்லாமல் இவர்களின் நல்ல குணத்திற்காகவும் கருணை மனதிற்காகவும், பிறரை மதிப்பிடாத தன்மைக்காக மட்டுமே மக்கள் இவரை விரும்புவார்கள்.

மொத்தத்தில் அழகு, அறிவு, பதவி, புகழ், பணம், திறமை இருக்கும் ஆல்பா ஆண்களை விட. கருணை, அன்பு, சாத்வீகம், பிறரை மதிக்கும் தன்மை கொண்ட ஒமேகா ஆண்களே பிறரால் அதிகம் விரும்பப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com