Do you know why the right side is important?
Do you know why the right side is important?https://tamilandvedas.com

வலது பக்கத்துக்கு முக்கியத்துவம் ஏன் தெரியுமா?

கோயில் தரிசனத்திற்கு போகும் பிள்ளைகளிடம் பெரியோர்கள், 'கோயிலை வலம் வர மறந்து விடாதே' என்று கூறுவது உண்டு. கோயிலை வலம் வர வேண்டும் என்பதற்காகவே இப்போதனை. இதன் பின்னால் சிறப்பான ஓர் அர்த்தமும், சாஸ்திரமும் இருக்கிறது.

காலையிலும் மாலையிலும் பொதுவாக உடற்பயிற்சியின் பொருட்டு குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்ய நாம் பழக்கப்படுத்தி இருக்கின்றோம். இது இயலாதவர்களுக்கு கோயில் தரிசனமும், கோயிலை வலம் வரும்போது நல்ல உடற்பயிற்சியாக அமையும். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் செய்யக்கூடிய ஓர் உடற்பயிற்சியே கோயிலை வலம் வருதல். காலணிகளை களைந்து வலம் வருதல், தோப்பு கரணமிடுதல், கும்பிடுதல் முதலியவை உடற்பயிற்சியின் சக்தியை அதிகரிக்கின்றது. இவ்வாறு நாம் அறியாமலேயே உடலில் உள்ள எல்லா மூட்டுகளும், தசைகளும் நன்றாக அசைவடையும் ஒரு உடற்பயிற்சியே கோயில் தரிசனத்தில் நாம் செய்வது.

‘வலம் வைத்தல்’ என்பது வலது பக்கம் சுற்றி வருதல் என்பதே. பொதுவாக, கோயில் வலம் வருவது வலது பக்கமாகத்தான். இப்படிச் செய்வதில் நாம் இறைவனிடம் கூடுதலாக நெருங்குகின்றோம் என்பது ஆச்சாரியார் படிப்பினை. கோயில் வலம் வரும்போது முன் ஜன்மங்களில் செய்த பாவமும் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.

'யானி யானிச பாபானி ஜன்மாந்தர கிருதா நிச தானி தானி வினஸ்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே' என்கிறது ஸ்லோகம். இன்னும் சொல்லப்போனால் நம் முன்னோர்கள் வலதுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தனர். வலது பக்கம் திரும்பி எழ வேண்டும், வலது கால் வைத்து நுழைய வேண்டும், வலது கையால் உணவருந்த வேண்டும் என்று வலதுக்கு மிக முக்கியத்துவம் இருந்து வருகின்றது. இடது கையால் தண்ணீர் குடிக்கும் குழந்தைகளையும், மற்றவர்களுக்கு கொடுக்கும் குழந்தைகளையும் பாட்டிமார்கள் கண்டிப்பது உண்டு.

வலது பக்கத்தால் செய்யப்படும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்ற உறுதியான எண்ணத்தையும் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு வீட்டிற்குள் நுழையும்போதும் வலது கால் வைத்துச் செல்ல வேண்டும் என்பது விதிமுறை. அவ்வாறு செய்யத் தவறினால் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கொடுத்து வலது காலை வைத்து நடக்கச் சொல்லுவார்கள். இதனால் மனித உடலில் வலது பக்கம் மிக முக்கியமானது என்பதை எவருக்கும் புரிந்துகொள்ள முடியும். ஒரு நபர் வலது காலை அழுத்தி மிதித்து நடக்கும்போதே அவர் வெற்றியின் பாதையில் செல்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
ஒன்றுபட்ட வாழ்க்கையே வலிமை சேர்க்கும்!
Do you know why the right side is important?

ஆன்மிகமாக சிந்தித்துப் பார்த்தாலும் வலதுக்கென்று தனிப்பட்ட சக்தி இருப்பதைக் காணலாம். ஒரு மனிதனை சோதனை செய்து பார்க்கும்போது அவனது வலது பாகத்து முக்கிய நரம்புகளின் செயல்பாடுகள் அவனை கூடுதல் கடமைகளைச் செய்ய வைக்கின்றன என்பதை நிரூபணம் செய்வதை காணலாம். அதாவது, வலது பாகத்தால் திறமையுடன் செயல்படலாம் என்று பொருள். மனநிலையும் வலது பாதத்தை சார்ந்திருக்கின்றது. வலது கால் வைத்து பிரவேசித்து, அதேபோல் வெளியேறுவதும், 'சுப லட்சணம்' என்று கருதுகின்றோம். மன சாஸ்திரமும் இதை ஆமோதிக்கின்றது. இதனால்தான் எந்த சுப காரியம் செய்ய வேண்டும் என்றாலும் வலது பக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் புதுமணப் பெண்ணையும் வலது கால் வைத்து வர சொல்லுவதும் இதனால்தான்.

ஆக, மொத்தத்தில் வீட்டிற்குள் நுழையும் புதுமணப் பெண்ணிலிருந்து, கோயிலில் வலம் வருவது வரை வலதுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரணம் அது வெற்றியை நோக்கியது என்பதால்தான்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com