இரவு உணவை ஏன் சீக்கிரம் சாப்பிட வேண்டும் தெரியுமா?

இரவு உணவை ஏன் சீக்கிரம் சாப்பிட வேண்டும் தெரியுமா?
Published on

மது முன்னோர்கள் இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். அதேபோல் சீக்கிரம் உறங்கி, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அன்றாடப் பணிகளை கவனிப்பார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து மோர் கடைந்து வெண்ணை எடுத்தவர்களும் உண்டு. அதேபோல், அவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை தேர்வு செய்து, அவற்றை ஏழு மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், அவர்கள் கையாண்ட உணவுப் பழக்கமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்கச் செய்தன. இரவு ஏழு மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றதன் பின்னணியில் உள்ள ஆரோக்கியம் சார்ந்த தகவல்களைக் கூறுவதே இந்தப் பதிவு.

இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை முடித்தால் அது ஜீரணமாவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்கும். அதை விடுத்து, இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, அவற்றின் செயல்பாட்டையும் தாமதப்படுத்தும். உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்கி, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையை துரிதப்படுத்தும். அதுமட்டுமின்றி, உடல் தூக்கத்துக்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.

தூக்கத்தின்போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்முறை நடைபெறும். ஆனால், இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது. இரவில் தூங்கினாலும் கூட காலையில் மந்தமான உணர்வு ஏற்படும். இரவில் உணவை முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு தூங்கினால், உடலுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதோடு, புத்துணர்ச்சியோடு அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.

இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இரவு நேரங்களில் வளர்ச்சிதை மாற்றத்தின் செயல்பாடு குறைந்து விடும். அதனால், உடலில் சேரும் கலோரிகளை எரிப்பது சவாலானது. தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல், கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை நிர்வகிப்பதற்கு இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்வது நல்லது.

இரவு உணவை சீக்கிரம் முடிக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம், இரவு உணவை குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட நேரத்தை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி இரவு உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்வது இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தைத் தடுத்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com