உங்களுக்கு ஐஸ் போட்ட ஜூஸ் மட்டுமே குடிக்க பிடிக்குமா?

Iced Juice
Iced JuiceImg Credit: Freepik

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் போட்ட ஜூஸ்கள் உள்ளிட்டவற்றை வெப்பமான சூழ்நிலைகளில் பருகும்போது சொர்க்கம் போல் தான் இருக்கும். அதே நேரத்தில் கோடை காலத்தில் தொடர்ச்சியாகக் குடிப்பதால் உங்களுக்கு நன்மைகள் மற்றும் சில அபாயங்கள் என இரண்டையும் ஏற்படுத்தும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

 1. குளிர்ந்த நீர் மற்றும் ஜூஸின் நன்மைகள்:

  • தாகம் தணித்தல்: குளிர் பானங்கள் தாகத்தைத் தணிப்பதில் கதகதப்பான திரவியத்தைவிட அதிக பயனுள்ளதாக இருக்கும். குளிர்ந்த ஜூஸ் அருந்துவதால் வரும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வு, குறிப்பாக வெப்பமான காலநிலையில், ‘ஜில்’லென்றுதான் இருக்கும். ஆனால், வெப்பத்தைத் தணிக்க இதுதான் முழு தீர்வு என்பதில்லை.

2. அபாயங்கள் மற்றும் பரிசீலனைகள்:

  • செரிமான பாதிப்பு: ஆயுர்வேத மருத்துவத்தின்படி, குளிரவைத்த நீரை தினமும் குடிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். காரணம் குளிர்ந்த நீரை உட்கொண்ட பிறகு உடல் அதன் மைய வெப்பநிலையை மீட்டெடுக்க கூடுதல் சக்தியைச் செலவிட நினைக்கும். ஆயுர்வேத பயிற்சியாளர்கள் வெதுவெதுப்பான நீர் செரிமானத்திற்குச் சிறந்தது என்று கூறுகிறார்கள்.

  • தலைவலி: சிலர் ஐஸ் போட்ட குளிர்ந்த தண்ணீரைக் குடித்த பிறகு தலைவலியை அனுபவிக்கிறார்கள். இது குறித்த ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் சராசரியாக 7.6% நபர்களுக்கு 150ml குளிர்ந்த நீரை உட்கொண்டது, தலைவலியை உருவாக்கியதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்குக் குளிர்ந்த நீரிலிருந்து தலைவலி வருவதற்கான வாய்ப்புகளும் இரு மடங்கு அதிகம்.

  • தொண்டையிலே கீச் கீச்: குளிர்ந்த நீரை தொடர்ந்து குடிப்பதால் தொண்டையில் வீக்கம் மற்றும் கரகரப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே சளி, காய்ச்சல் அல்லது ஒவ்வாமை இருந்தால், குளிர் பானங்கள் காரணமாக தொண்டையில் சளி அதிகரிப்பு ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் புத்தகப் பிரியர்களாக வளரச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
Iced Juice
  • பற்களின் உணர்திறன்: குளிர் பானங்கள் சில நேரங்களில் பல் உணர்திறனை தூண்டலாம். குறிப்பாக நீங்கள் பல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு  இருந்தால். குளிர்ந்த ஜூஸ் குடிக்கும்போது உங்களுக்கு அசௌகரியம் ஏற்படும்.

  • வளர்சிதை மாற்றம்(Metabolism): ஐஸ்-குளிர்ந்த நீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள், காரணம் நம் உடலானது வெப்பத்தை தக்க வைக்க அதிக ஆற்றலைச் செலவிடுகிறது. இருப்பினும், அந்த நேரத்தில் வளர்சிதை மாற்றத்தின் தாக்கம் பொதுவாக குறைவாகவே இருக்கும்.

  • எடை குறைப்பு என்ற  கட்டுக்கதை:  குளிர்ந்த நீரை அல்லது குளிர்ந்த ஜூஸ்  தினமும் குடிப்பதால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று ஒரு பொதுவான கட்டுக்கதை உள்ளது. குளிர்ந்த நீரை குடிப்பதால் நம் உடல் சூடேற்றுவதற்கு ஆற்றலைச் செலவழிக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், எடை இழப்புக்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு.

  • உட்கொள்ளும் நேரம்(Timing Matters): குளிர்வைத்த ஜூஸ் உட்கொள்ளும் நேரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உணவுக்கு முன் அல்லது பின் இதை குடிப்பது செரிமானத்தை சற்று பாதிக்கும். சிலர் செரிமானத்திற்கு உதவுவதற்காக உணவின்போது கதகதப்பான தண்ணீரை விரும்புவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com