உங்களுக்கு நிஜமாகவே பைக் ஓட்டத் தெரியுமா?

Do you really know how to ride a bike?
Do you really know how to ride a bike?https://bikeindia.in

க்கள் தொகை அடிப்படையில் 145 கோடியைத் தாண்டி உலகிலேயே முதலிடம் பிடித்த இந்தியாதான் இரண்டு சக்கர வாகனங்கள் (Two wheeler) அடிப்படையிலும் முதலிடம் வகிக்கிறது.

சுமார் 35 கோடி இரண்டு சக்கர வாகனங்கள் இந்திய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கார் வைத்திருப்பவர்களை விட பைக், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் 5 மடங்கு அதிகம்.

நடுத்தர மக்களின் தினசரி பயணத்திற்கான பொதுவான விருப்பமாக மோட்டார் சைக்கிள்கள் (Bike) மாறி வந்தாலும், இங்கு பைக் வைத்திருக்கும் பலரும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் விதம் குறித்து அறியாமல் உள்ளனர். இதனால் வருடம்தோறும் அதிக அளவு விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள்.

இந்திய சாலைகளில் பைக் ஓட்டும் பெரும்பாலானவர்கள் எந்த முறையான பயிற்சிக்கும் செல்லாமல் தானாகவே கற்றுக்கொண்டு ஓட்டத் தொடங்கியவர்கள்தான்! எனவே, நாம் அறிந்து, தெளிந்து, தெரிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

தலைக்கவசம்: தலைக்கவசமே உயிர்க் கவசம் என்பதால் ஹெல்மெட் அணியாமல் எந்தவொரு வாகனத்தையும் இயக்காதீர்கள்.

மிதமான வேகமே பாதுகாப்பு: இன்றைய தலைமுறையினர் பலர் உணர்ச்சி மிகுதி மற்றும் மகிழ்ச்சி காரணமாக மிகவும் வேகமாக கட்டுப்பாடின்றி ஓட்டுவதே விபத்துகளின் முதல் காரணம். எனவே, பைக்கை எப்போதும் சீரான வேகத்தில் கவனமாக ஓட்டவும்.

குறுகிய சாலை குறைந்த வேகம்: இந்திய சாலைகளைப் பொறுத்தமட்டிலும் திடீரென்று மக்கள், பிற வாகனங்கள், ஆடு, மாடுகள் போன்றவை குறுக்கே கடப்பது மிகச் சாதாரண விஷயம். இவற்றிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள குறுகிய சாலைகள் மற்றும் நகரங்களில் குறைவான வேகத்தில் பைக் ஓட்டுவதே பாதுகாப்பானது.

வாகன இடைவெளி: முன்னால் செல்லும் வாகனங்களிடம் இருந்து குறைந்தது பத்து அடி தொலைவு இடைவெளி விட்டு வாகனத்தை இயக்குவது பாதுகாப்பானது.

எங்கும் அவசரம் எல்லோருக்கும் அவசரம்: ஒரு சாலையை விட்டு இன்னொரு சாலையை கடக்கும்போதுதான் பல விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் மக்களிடம் நிதானம் இல்லாததே ஆகும். எனவே, சாலைகளைக் கடக்கும் நேரத்தில் அவசரமின்றி மிகவும் பொறுமையோடு கடப்பதே அவசியம்!

இண்டிகேட்டர் இன்றியமையாதது: நாம் எந்த திசையில் செல்ல இருக்கிறோம் என்பதை வாகனத்தின் இண்டிகேட்டர் மூலம் தெளிவுபடுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஆறு விதமான பழங்கள் எவை தெரியுமா?
Do you really know how to ride a bike?

Low Beam - High Beam இயக்கம்: எப்போதும் பைக்குகளை Low Beam கொண்டு ஓட்டுவது சிறந்தது. தேவை ஏற்பட்டால் நெடுஞ்சாலைகளில் மட்டும் High Beam பயன்படுத்தவும். ஏனென்றால் High beamன் பிரகாசமான வெளிச்சத்தால் எதிர்வரும் வாகனங்களுக்கு சிரமம் ஏற்படும். இதனாலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிளட்ச் - பிரேக் - கியர் பயன்பாடு: பைக்கை ஓரளவுக்கு ஓட்டத் தெரிந்தாலும்கூட பலருக்கும் கிளட்ச், பிரேக் அல்லது கியர் ஆகியவற்றை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது தெரியாது. சாலை விபத்துகளில் அவர்கள் அடிக்கடி சிக்கிக்கொள்ள இதுதான் முதன்மையான காரணம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com