ரோஸ் வாட்டர் யூஸ் பண்றீங்களா? இனி ஈஸியா வீட்டிலேயே செய்ய சூப்பர் டிப்ஸ்!

ரோஸ் வாட்டர் யூஸ் பண்றீங்களா? இனி ஈஸியா வீட்டிலேயே செய்ய சூப்பர் டிப்ஸ்!

சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது.. முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் உள்ளன. ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன . இது முகப்பரு, பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் ரோஸ் வாட்டர் முகப்பரு பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது.

முகத்தில் இருக்கும் சுருக்கங்களுக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் முகம் வயதானது போல் காட்சியளிப்பதை குறைக்கலாம். இது சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் கோடுகளை குறைக்கவும் உதவுகிறது.

சிலருக்கு வெயிலில் செல்லும் போதும் முகம் சிவப்பாக மாறிவிடும். இதை ஆங்கிலத்தில் சன் பர்ன் என அழைப்பார்கள். ரோஸ் வாட்டரில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சன் பர்ன் வருவதை தடுத்து அதை குறைக்க உதவுகிறது. தோல் நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ-ரேடிக்கல்களின் விளைவை குறைக்கவும் ரோஸ் வாட்டர் உதவுகின்றன.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை குறைக்க ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைக்கவும். இப்படி செய்வதால் கருவளையங்களை குறைக்கலாம்.

ரோஸ் வாட்டர் செய்வது எப்படி?

பன்னீர் ரோஜா இதழ்களை 2 ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். ரோஜா இதழ்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் குறைந்த தீயில் அடுப்பில் வைக்கவும். ரோஜா இதழ்களின் நிறத்தை தண்ணீர் எடுக்கும் வரை காத்திருந்து, தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறியதும் அடுப்பை ஆஃப் செய்யவும். பிறகு ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி, அதை ஃபிரிட்ஜில் வைத்து தினமும் பயன்படுத்தவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com