

வாழ்க்கையில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நமக்கு சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். முடி, நகம் வெட்டும் போது பொதுவாக எல்லோரும் ஞாயிற்றுக் கிழமையையே தேர்ந்தெடுக்கிறோம். இந்த இரண்டு விஷயங்களுக்கும் நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வவளம் ஆகியவற்றிற்கும் தொடர்பு உடையதாக சாஸ்திரம் கூறுகிறது.
சில தெய்வங்களுக்கு எதிரான செயல்கள் செய்வதன் மூலம் எதிர்மறையான விஷயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
நாம் செய்யக் கூடிய சில வேலைகளுக்கு நாள், கிழமை, நேரம் பார்ப்பதில்லல. அதைக்குறித்து யாராவது சொன்னால் கூட நம்பமாட்டோம். இப்படி நேரம் காலம் பார்க்காமல் செய்யும் தவறுகள் நமக்குக் கஷ்டத்தை ஏற்படுத்தும். எதையும் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி காலத்துக்கும் நேரத்துக்கும் உண்டு. இதனால்தான் கடன் வாங்குவது, வாகனம் வாங்குவது இப்படி எல்லா விஷயத்தையும் நல்ல நேரத்தில் செய்யவேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.
நகம் முடி போன்றவற்றை எந்த நாளில் வெட்டலாம் எந்த நாளில் வெட்டக்கூடாது என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. பொதுவாக செவ்வாய், வெள்ளிகளில் நகம் வெட்டக்கூடாது, மாலை வேளயில் விளக்கு வைக்கும் நேரத்தில் நகம் வெட்டக்கூடாது. அதேபோல் அமாவாசையில் முடி வெட்டக்கூடாது என்று வரையறுத்துள்ளனர்.
உங்களுக்கு செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்றால் செல்வத்தைச் பெருக்கிக் கூடிய ஆற்றல் தரக் கூடிய புதன் கிழமையில் நகம், முடி வெட்டுவது நல்லது. வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உகந்தநாள் அன்று முடி வெட்டுவது நல்லது. ஆனால் செவ்வாய் சனிக்கிழமைகளில் முடியோ நகமோ வெட்டக் கூடாது. அப்படி வெட்டினால் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகுவதற்கு ப் பதிலாக தரித்திரம் நடமாடும்.
எந்த நாளில் முடிநகம் வெட்டினால் என்ன பலன்?
திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகவும், சிவ வழிபாட்டுக்குரிய நாளாகவும் கருதப்படுவதால் இந்நாளில் நகம் முடி வெட்டினால் மன அழுத்தம் அதிகரிக்கும் ஆரோக்கியம்கெடும்.
செவ்வாய் கிழமை அனுமனுக்குரிய நாள். இந்நாளில் நகம் வெட்டினால் கோபம் அதிகரித்து ஆயுளைக் குறைக்கும்
புதன் பெருமாளுக்குரிய நாளாகும் அதனால் நம்மை அழகுபடுத்த முடி நகம் இந்நாளில் வெட்ட குலதெய்வ அருள் கிடைக்கும். லட்சுமி தேவியின் ஆசியும் கிடைக்கும்.
வியாழன் குருவுக்கு உகந்த நாள் ஆனதால் இந்நாளில் நகம் முடி வெட்டுதல் தீய பலனைத்தரும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் சுக்கிரனுக்கும் உகந்த நாள். இந்நாளில் முடிவெட்ட செல்வம் புகழ் அதிகரிக்கும்.
சனி பகவானுக்குரிய சனிக்கிழமைகளில் நகம், முடி வெட்டுவது அமங்கலமாக கருதப்படுகிறது அப்படிச் செய்தால் அகால மரணம் நிதி இழப்பு ஆகியவைகள் ஏற்படும்.
ஞாயிறு சூரியனுக்குரியது இந்நாளில் முடி நகம் வெட்டுவது செல்வம் மற்றும் ஞானத்தை சீர் குலைத்து விடும். நகம் முடி வெட்டுவதை ஏனோதானோ என்று இஷ்டப்படி செய்யாமல் மேற்கூறிய விஷயகளை நினைவில் கொண்டு அந்த செயல்களை செய்வதன் மூலம் நல்ல வளங்களுடன் சிறப்பாக வாழ வழி வகுக்கும்.