ஏ.ஸி. வாங்கலையோ?

ஏ.ஸி. வாங்கலையோ?
Published on

“புதுசா ஏஸி வாங்கி இருக்கியாமே கோகிலா? வெரிகுட்... வசதிதான்” என்று வெளிப்படையாகச் சொன்னாள் காய்கறி வாங்க வந்த கோகியிடம் பக்கத்து வீட்டு ராதா.

“இப்பல்லாம் வசதி கருதி இல்லை ராதா. தேவை கருதிதான் எல்லா பொருட்களும் வாங்க வேண்டியிருக்கு. இயற்கை காத்துக்கு மிஞ்சினது எதுவுமில்லை. ஆனா நாம இயற்கையிலேர்ந்து ரொம்ப விலகி போயிட்டே இருக்கோம். அதான் ஆயிரத்து எட்டு ஹெல்த் பிரச்னைகள்” என்ற கோகி, “உள்ளே வந்து பாருங்க” என்று அழைப்பு விடுத்தாள்.

“சரி, ஒத்துக்கறேன். எங்க வீட்டிலேயும் ஏஸிய சீக்கிரம் சரி பண்ணனும். வெயில் இந்த போடு போடுது” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போது கோகி ஒரு பெரிய க்ளாஸில் மாம்பழ ஜூஸ் கொண்டு வந்த தர, ராதாவும் அவளும் சோபாவில் உட்கார்ந்து ஏஸி போட்டு விட்டு பேச ஆரம்பித்தார்கள். ஏஸியின் மெல்லிய சத்தம் அவர்களின் பேச்சு சத்தத்தில் அமைதியானது.

ராதா:- ஏஸியின் குளிர்ச்சி பொதுவா 18 – 24 டிகிரி சென்டிகிரேடு அளவில் இருக்கலாம் கோகி. கூல் வேணும்னு உன் பையன் பாட்டுக்குக் குறைச்சு வைச்சுடப் போறான்.

கோகி:- நான் ரிமோட்டை அதுக கையில தந்தாதானே? ராகவ் சொன்னாரு இரும்பு பீரோ, கேஸ் சிலிண்டர் போன்ற பொருட்கள், எலக்ட்ரிக் குக்கர், வாட்டர் கூலர், காபி மேக்கர், ஐயர்ன் பாக்ஸ், ஃபிரிட்ஜ் போன்ற வெப்பத்தை வெளியிடும் மின் சாதனங்களையும் ஏஸி அறையில் பயன்படுத்துவது ஆபத்து.

ஸ்டெபிலைசர், யு.பி.எஸ், ‘இன்வர்டர்’ போன்ற வெப்பத்தினை வெளியேற்றும் கருவிகளும், ஏஸி ரூமுக்கு வெளியேதான் இருக்கணுமாம்.

ராதா:- அப்படியா? நான் உடனே ரூம்ல இருக்கற பீரோவை ஹாலுக்கு மாத்திடறேன். அதோட ஏ.ஸி.ரூம்ல ஃபேன் பயன்படுத்தக் கூடாது. சிலர் பேனைப் போட்டால் சீக்கிரம் குளிர்ச்சியாகும்னு நினைப்பாங்க. ஆனா அது கிடையாது. உடனே நீ ரூமோட மேற்கூரைல ஒரு வெப்பம் தணிக்கும் அமைப்பை ரெடி பண்ணு. அப்புறம் ஏ.ஸி. ரூமின் ஜன்னல் வழியாக வெளிச்சம் வராதபடி இருக்க சன் ஃபிலிம் மற்றும் விண்ட் ஷில்டு போன்ற ஸ்கிரீன் பயன்படுத்து, சூப்பரா இருக்கும்.

கோகி:- ஓ... இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

ராதா:- புக்ல படிச்ச ஞாபகம் அதோட போன தடவை ஏஸி மெக்கானிக் சொன்ன டிப்ஸ் இது.

கோகி:- அப்புறம் ஏ.ஸி ரூமிலிருந்து வெளிய வரதுக்கு அரை மணி நேரம் முன்னாடியே ஏஸியை அணைச்சுடணும்.

ராதா:- குட். அப்பறம் ஏ.ஸி.யை வடிகட்டும் அமைப்பை அதன் ஃபில்டர். அதை மாசா மாசம் சுத்தம் செஞ்சுடு. அழுக்கடைஞ்ச ஃபில்டர் காற்றோட்டத்தைக் குறைக்கும். அப்புறம் ஏஸியைப் பழுதாக்கிடும் ஜாக்கிரதை.

கோகி:- ரொம்ப தாங்க்ஸ் மாமி. அப்பப்ப வாங்க. இந்த மாதிரி பயனுள்ள விஷயங்களை ஷேர் பண்ணிக்கலாம்.

ராதா: - ஷ்யூர்., அப்ப... வரட்டா? பை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com