சோதனைகளை சாதனைகளாக்கி இரட்டை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி!

ஜூலை 4, மேரி கியூரி நினைவு தினம்
Marie Curie
மேரி கியூரிhttps://www.meteorologiaenred.com

மேரி கியூரி - நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி மற்றும் இரட்டை நோபல் பரிசுகளை வென்ற சாதனையாளர். இதுவரை இவரது சாதனை யாராலும் முறியடிக்கப்படவே இல்லை. வாழ்வில் துயரங்கள் சூழ்ந்தபோதும் மனம் தளராது விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ரேடியம், பொலோனியம் என்று இரண்டு வேதியல் தனிமங்களை உலகிற்கு கண்டுபிடித்துத் தந்தவர்.

வறுமையிலும் வாடாத கல்வி: போலந்து நாட்டில் ஆசிரியர்களான பெற்றோர்களுக்கு ஐந்தாவதாக பிறந்த மேரி சிறு வயது முதற்கொண்டு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி ஊட்டி வளர்க்கப்பட்டவர். பலவிதமான பொருளாதார சிரமங்களுக்கிடையிலும் படிப்பில் சிறந்து விளங்கினார். கல்லூரிப் பருவத்தை எட்டியபோது போலந்தில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு தடை இருந்ததால், பாரிஸில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். பல நேரம் பட்டினி கிடந்து சேமித்த பணத்தில் பாடப்புத்தகங்கள் வாங்கினார். இயற்பியல் மற்றும் கணிதத்தில் பட்டங்கள் பெற்றார்.

இனிய குடும்பம்: 1895ல் பியரி கியூரி என்ற ஒரு இயற்பியலாளரை மணந்தபோது, ஒத்த நோக்கு மற்றும் பணி கொண்ட கணவர் கிடைத்ததில் மேரிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இருவரும் ஆராய்ச்சிக்கூடத்தில் நேரத்தின் பெரும் பகுதியை செலவிட்டனர். மேரி ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, அதீத பாசம் கொண்ட அன்னையும் கூட.

அன்பான அன்னை: அப்போதைய காலகட்டத்தில் அறிவியலில் புதிதாக ஏதாவது சாதிக்க விரும்பும் பெண்கள் குடும்ப வாழ்க்கையை கைவிட வேண்டும் என்கிற கருத்து நிலவியது. ஆனால், தன்னுடைய ஆராய்ச்சிக்காக குடும்பத்தை மேரி கைவிடவும் இல்லை, கவனிக்காமல் இருந்ததும் இல்லை. தன்னுடைய இரண்டு பெண்களையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வளர்த்தார். ஐரின், ஈவா என்ற தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் பார்த்துப் பார்த்து வளர்த்தார். ஐரின் தனது பெற்றோரைப் போலவே விஞ்ஞானியானார்.

சாதனைகள்: 1906ல் பியரி ஒரு விபத்தில் இறந்துபோக, மேரி நிலைகுலைந்து போனார். கணவரை இழந்த அந்த துக்கம், மனதை தாக்கியபோதும் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள ஆராய்ச்சியில் இன்னும் தீவிரமாக இறங்கினார். பொலோனியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதற்காக 1911ல் வேதியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

இதையும் படியுங்கள்:
யாத்திரைக்கு தயார் நிலையில் பூரி ஜகந்நாதர்!
Marie Curie

நான்கு நோபல் பரிசுகள்: அவரது மகள் ஐரினும், மருமகன் ஃபிரடெரிக் ஜோலியட்டும் செயற்கை கதிரியக்கத்திற்கான அவர்களின் பணிக்காக 1935ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நோபல் பரிசு பெற்றது அரிய சாதனையாகும்.

உடல்நலப் பிரச்னைகள்: கதிரியக்கப் பொருட்களுடன் கியூரி தொடர்ந்து வேலை செய்ததில்  நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டார். இறுதியில் 1934ம் ஆண்டில் அப்லாஸ்டிக் அனீமியாவால் இறந்தார்.  இது கதிர்வீச்சின் நீண்டகால வெளிப்பாடு காரணமாக இருக்கலாம்.

வரலாற்று அங்கீகாரம்: மேரி கியூரி பாரிஸில் ரேடியம் நிறுவனத்தை (இப்போது கியூரி நிறுவனம்) நிறுவினார். இது ஒரு முன்னணி மருத்துவ ஆராய்ச்சி மையமாக உள்ளது. வார்சாவில் இதேபோன்ற ஒரு நிறுவனத்தை நிறுவவும் அவர் உதவினார். அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட அவரது குறிப்பேடுகள் மற்றும் காகிதங்கள் இன்னும் ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

அங்கீகாரம்: மேரி கியூரி அறிவியலில் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், விடாமுயற்சி மற்றும் அறிவார்ந்த தன்மையின் அடையாளமாகவும் இருந்தார். அறிவியல் மற்றும் மனித நேயத்திற்கான அவரது பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com