

அன்றாட அவசிய தேவையாக மாறிவிட்ட வாஷிங்மெஷின் சில நேரங்களில் வேலையை குறைப்பதற்கு பதிலாக, சரியாக கையாளத் தெரியாததால் வேலையை அதிகரித்துவிடுகிறது. அந்த வகையில் டாப் லோடு வாஷிங்மெஷினை எளிதாக கையாள தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. கையால் துணிகளை துவைத்து அலசிய பிறகு, அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வாஷிங் மெஷினில் ட்ரையரை மட்டும் பயன்படுத்தலாம். அதற்கு துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு மூடிய பிறகு spin பட்டனை அழுத்தி normal mode வைத்து play செய்தால் துணிகளின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட நேரத்தில் துணி ட்ரை ஆகிவிடும்.
2. துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு பவர் ஆன் செய்து A1 wash கொடுத்த பிறகு தண்ணீர் வரவில்லை என தெரிந்தால் pause பட்டனை அழுத்தினால் சைல்ட் லாக் ஓபன் ஆகும். அப்போது கையால் தண்ணீரை எடுத்து ஊற்றி மூடிவிட்டு பிளே பட்டனை ஆன் செய்தவுடன் ஏற்கனவே செட் செய்த டைமை விட அதிகமாக காட்டும். அதனால் கால விரயம் ஏற்படும் என்பதால் மெஷினை ஆப் செய்து, பிறகு ஆன் செய்து நார்மல் மோடுக்கு சென்று, வாட்டர் லெவலை செட் செய்து, ப்ளே பட்டனை அழுத்தினால் முதலில் நாம் குறித்த குறைந்த நேரத்தையே காட்டும்.
3. வாஷிங்மெஷின் சைல்ட் லாக்கில் இருந்தாலும் பாஸ் பட்டனை அழுத்திய பிறகுதான் திறக்கவேண்டும். இல்லையென்றால் வாஷிங் மெஷின் மூடி உடைந்துவிடும்.
4. வாஷிங்மெஷினில் துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது பாதி தண்ணீர் மட்டும் இருந்தால் மெஷினை pause செய்து அதில் உள்ள துணிகளை வெளியே எடுக்க வேண்டும். அப்போது வாஷிங்மெஷினில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மெஷினை ஆன் பண்ணி நார்மல் மோடிற்கு சென்று ஸ்பின் பட்டனில் ஒன்றை மட்டும் செலக்ட் செய்து பிளே பட்டனை அழுத்தினால் தண்ணீர் வெளியேறிவிடும்.
5. வாஷிங்மெஷினில் ஆட்டோமேட்டிக் டோர் தானாக சென்று பொருந்தாமல் இடையிலேயே நின்றுவிட்டால் அதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கும் என்பதால் வாஷிங் மெஷின் சர்வீஸ் செய்பவரை கூப்பிட்டுதான் சரிசெய்ய வேண்டும்.
6. துணிகளில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் comfortயை மெஷின் துணிகளை அலசி முடித்து ட்ரையருக்கு செல்லும் ஒரு நிமிடம் முன்பாக (அதாவது கடைசி 10 நிமிடங்கள் முன்பாக) மெஷினை pause செய்து மூடியைத் திறந்து நேரடியாக துணிகளில் கம்போர்டை ஊற்ற துவைத்த துணிகள் கமகமக்கும்.
மேற்கூறிய முறைகளில் வாஷிங்மெஷினை கையாள்வதன் மூலம் எளிதாக பராமரிப்பதோடு நேரத்தை மிச்சப்படுத்தலாம்.