பாத்திரங்களை 'பளீச்' ஆக்கும் டிஷ் வாஷ் பொடி... வீட்டிலேயே செய்து அசத்தலாம் வாங்க!

dish wash powder
dish wash powder
Published on

வீட்டில் சமைப்பவர்களுக்கு தெரியும் பாத்திரம் கழுவுவது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. அப்படி தினமும் திணறி வருபவர்களுக்கு அசத்தலான டிப்ஸ் இதோ..

அனைத்து வீடுகளிலும் தினசரி சமையல் என்பது எவ்வளவு கடினமான வேலையோ, அதே போன்று பாத்திரம் கழுவுவதும் ஒரு கஷ்டமான வேலை தான். சமைத்து கூட விடலாம், பாத்திரம் கழுவுவது தான் எரிச்சல் என பலரும் கூறி கேட்டிருப்பீர்கள்.

இதை விட டீக்கரை, துருக்கரை, வடச்சட்டி கரை என அனைத்தையும் கஷ்டப்பட்டு தேய்ப்பது மிகவும் சிரமம்தான். அனைவரும் பாத்திரம் கழுவுவதற்கு சோப், ஜெல் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அதை விட டபுள் மடங்கு பாத்திரங்களை பளீச் என்று மாற்ற வீட்டிலேயே இந்த பாத்திரம் துலக்கும் பொடியை தயாரித்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பாத்திரம் கழுவும் வேலை பாதி அளவிற்கு குறைந்துவிடும். இந்த ஈஸியான ஹோம் மேட் பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கடலை மாவு

அரிசி மாவு

சிட்ரிக் ஆசிட்

சோப் பொடி

செய்முறை:

கடலை மாவு ஒரு படி, அரிசி மாவு ஒரு படி, ஒரு சின்ன கப் சிட்ரிக் ஆசிட் மற்றும் ஒரு சின்ன கப் சோப் பொடி சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இதை அரைத்த மிக்ஸி ஜாரே பளபளவென இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அவ்வளவு தான் ஹோம் மேட் டிஷ் வாஷ் பொடி ரெடி. இதை ஒரு ஸ்பூன் எடுத்து வைத்து அதில் தண்ணீர் கலந்து பாத்திரத்தை கழுவினால், அனைத்து பாத்திரங்களும் பளீச் ஆகிவிடும். இனி உங்கள் பாத்திரம் தேய்த்து கழுவும் வேலை எளிதாகிவிடும்.

இந்த பொடியை நீங்கள் பூஜை பாத்திரங்களுக்கு கூட பயன்படுத்தலாம். எண்ணெய் பிசுக்கின்றி புதிதாக மாறிவிடும். அரைத்து வைத்த இந்த பொடியை தண்ணீர் படாமல் ஒரு மூடி போட்ட டப்பாவில் போட்டு வைத்தால், சுமார் 1 மாதம் வரை கெடாமல் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com