

தன்னையும் அழித்து தனக்கு அருகில் உள்ளவர்களையும் அளிக்கும் தன்மை கொண்டது கோபம். எவ்வளவுதான் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றாலும் சில நேரங்களில் பூதாகரமாக வெடித்து அந்த இடத்தையே ரணகளம் ஆக்கிவிடும். வாழ்க்கையின் வெற்றிக்கு கோபம் இல்லாமல் இருப்பதும் சிறந்த வழியாகும் அந்த வகையில் கோபத்தை எளிய முறையில் குறைக்கும் அற்புதமான 9 வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மூச்சுப் பயிற்சி
கோபம் வரும்போது மெதுவாக காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் மூச்சுப் பயிற்சி செய்யும்போது மனம் அமைதி அடைந்து கோபம் தணிந்து மனம் சமநிலை அடைந்திருக்கும்.
எதிர்வினைக்கு 'நோ 'சொல்லுங்க
கோபம் வந்தவுடன் உடனடியாக பதிலுக்கு கோபத்தைக் கொட்டி எதிர்வினை ஆற்றாமல் 'நோ' சொல்லிவிட்டு மௌனமாக சிறிது நேரம் அமர்ந்திருந்தாலே கோபம் குறைந்து சூழல் மாறிவிடும்.
குளிர்ச்சிக்கு ஒரு டம்ளர் தண்ணீர்
கோபம் வரும்போது உடல் சூடாகி மேலும் கோபத்தை அதிகப்படுத்தும் என்பதால் அதனை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து உடலை குளிர்வித்தால் கோபம் குறையும்.
விலகி இருப்பது
கோபம் உண்டாக்கும் இடத்தில் இருந்து சிறிது நேரம் விலகி இருந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சூழல் மாறி கோபம் காணாமல் போயிருக்கும்.
எண்ணுவது உத்தமம்
அதிகப்படியான கோபம் வரும்போது ஒன்றிலிருந்து பத்து வரை மெதுவாக எண்ணும்போது மனம் திசை மாறி கோபத்தை 'போ 'என சொல்லி இருக்கும்.
பேப்பரில் எழுதுவது
கோபம் வந்ததற்கான காரணத்தை பேப்பரில் எழுதும்போது மனம் லேசாகி கோபம் குறைந்துவிடும்.
பாடல்கள் கேட்பது
கோபமாக இருக்கும்போது பிடித்த பாடல்களை கேட்டால் மன அழுத்தம் குறைவதோடு கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நடைப்பயிற்சி, யோகா
அதிகப்படியான கோபத்தை/ கட்டுப்படுத்த நடைப்பயிற்சி, யோகா செய்வது கோபத்தை விரட்ட உதவும் மருந்தாகும்.
போதிய தூக்கம்
போதிய தூக்கமின்மையும் கோபத்தை அதிகரிக்கும் வழி என்பதால் தினமும் 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்வது கோபத்தை குறைக்கும்.
மேற்கூறிய வழிமுறைகளை கையாள்வதோடு கோபமே படக்கூடாது என கொள்கையை வைத்துக்கொண்டு அனைவரிடமும் பொறுமையை கையாளவேண்டும் என நினைத்து செயலாற்றினால் கோபம் என்ற வார்த்தை காணாமல் போயிருக்கும்.