Senior Living Home renovation
Senior Living Home

இல்லத்தின் மறுசீரமைப்பு; முதியோருக்கு ஏற்ற பாதுகாப்பு!

Published on

நாம் அன்பு செலுத்தும் முதியவர்களுக்கு அவர்களது தேவைகளுக்கு ஏற்ப வீட்டில் சில வசதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிசெய்யும் வகையில் வீட்டை சீரமைத்து அதில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவது அவர்கள் பிறரை சார்ந்திராத தன்மையை அளிக்கும். இந்தக் கட்டுரை அதற்கான நடைமுறைக்கேற்ற தீர்வுகளை அளிக்க முயற்சிக்கிறது. அதாவது முதியவர்களுக்கு ஏற்ற, அவர்களுக்கான எளிதான அணுகுதகைமை, பாதுகாப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை, வீட்டின் அழகியலை சமரசம் செய்துகொள்ளாமல், எடுத்துரைக்கிறது.

1. முதியோரின் தேவைகளை உணர்தல்

வீட்டை மறு சீரமைப்பதற்கு முன்பாக முதியோரின் தனிப்பட்ட தேவைகளை மதிப்பிடுவது முக்கியம். இயக்கங்கள் குறைதல், அறிவாற்றல் குறைதல், நீண்ட நாள் ஆரோக்கிய குறைப்பாடுகள், புலன்களில் சிக்கல்கள் போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும். தொழில்சார்ந்த சிகிச்சையாளர்கள், வீடுகளில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான மதிப்புமிக்க இந்த ஆலோசனைகளை அளிக்கக்கூடும். முதியோரின் உடல் நலம் மற்றும் உணர்வுகள் தொடர்பான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கக்கூடிய சிறப்பான தீர்வுகளை அவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com