முதியோர் வாழ்க்கையில் மூப்பியல் மருத்துவரின் முக்கியத்துவம் என்ன?
மூப்படைதல் என்பது வாழ்க்கையின் சற்றே சிக்கலான தருணம். அது பல தனித்தன்மை கொண்ட உடல்நல சவால்களை தன்னுடன் கொண்டு வருகிறது. அவற்றிற்கு தனிப்பட்ட கவனம் தேவைப்படுகிறது. முதியோர்களுக்கு, மூப்பியல் மருத்துவர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருப்பது கீழ்க்கண்ட காரணங்களிலால்தான்.
1. பலவித நீண்டகால நோய்களை நிர்வகிக்க வேண்டும்:
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மூட்டுத் தேய்மானம், இதய நோய் போன்ற பல நீண்டகால நோய்களுடன் முதியவர்கள் வாழ நேர்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கான சிகிச்சைகளை சரியான முறையில் சமன் செய்யவும், தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அந்த சிகிச்சைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இல்லாமல் இருப்பதையும் ஆபத்தான பக்க விளைவுகளை உருவாக்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் மூப்பியல் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.
2. பலவித மருந்துகள் உட்கொள்வது தொடர்பான அக்கறை:
முதியவர்கள் பலவித மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மருந்துகளை ஆய்வுசெய்து அவை ஒன்றோடொன்று எதிர்வினை செய்வதை மிகவும் குறைக்கவும், அதிகப்படி மருந்துகள் அளிக்கப்படுவதைக் குறைக்கவும், தேவையற்ற மருந்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பான மருந்துகளை உட்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் மூப்பியல் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.