Elements Senior citizen apartments
Senior citizens

பாரம்பரிய இந்திய குடும்பங்களில் பெரியவர்களின் மகத்தான பங்கு - மதித்து போற்றுவோம்!

Published on

இந்திய குடும்பங்களில் பெரியவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆனது போற்றுதற்குரியது. பாரம்பரியமாக ஒவ்வொரு இந்திய குடும்பங்களிலும் வயதானவர்களின் பங்கு மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக சொல்லப்படுகிறது. இது அவர்களது அனுபவம் அதனுடன் கூடிய அறிவாற்றல், வழிகாட்டுதல் போன்றவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அதனால் இந்திய குடும்பங்கள் ஒவ்வொன்றும் பெரியவர்களின் வழிகாட்டுதலில் கட்டமைக்கப்பட்டுள்ள தூண்களாகவே உள்ளன.

பாரம்பரிய இந்திய குடும்பங்களில் பெரியவர்களின் மகத்தான பங்கு குறித்தும் அவர்களை மதித்து போற்றுவதன் அவசியம் குறித்தும் Elements Senior Living நிறுவனத்தின் இயக்குனர் அஸ்வின் ஐயர் பேசுகையில்...

Ashwin Iyer - Elements
Ashwin Iyer - Elements

"இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பில் முதியவர்கள் தான் குடும்பத்தை வழிநடத்தும் தார்மீக திசைக்காட்டியின் பாதுகாவலர்கள். அதனால் வயதானவர்கள் அதிகாரம் கொண்டவர்கள் என்று சொல்லிவிட வேண்டாம். அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அனுபவமிக்க அறிவாற்றல் மூலம் அவர்களை மரியாதையுடன் கூடிய அதிகார வர்க்கத்தில் வழிநடத்த அனுமதிக்கிறோம். அவர்கள் சொல்லும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது நவீன கால வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை வழிநடத்த  இளைய தலைமுறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்திய கலாச்சாரத்தின் அடித்தளத்தை உருவாக்கும் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் தார்மிக விஷயங்களை அளிப்பதற்கும் குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெரியவர்கள் அளிக்கும் வழிகாட்டல் மகத்தானது. மதிக்கத்தக்கது.  

குடும்ப கட்டமைப்புகளில் பெரியவர்களின் பங்கு வெறும் பாதுகாவலர்கள் என்ற வகையில் மட்டுமல்ல. அவர்கள் சிறந்த வழிகாட்டிகளும் கூட. அவர்களது அனுபவங்களான மதிப்புமிக்க செல்வம், தனிப்பட்ட உறவுகள்  முதல்  தொழில்சார்ந்த பிரச்சனைகள் வரை பல விஷயங்களில் ஆலோசனை பெற உதவுகிறது. இதனால் குடும்பத்தில் இருக்கும் இளைய உறுப்பினர்கள் தங்களது வாழ்க்கையில் உத்வேகம் பெறுகிறார்கள்.

மேலும் பெரியவர்கள் பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் உள்ள இடைவெளியை  குறைக்கிறார்கள்.  இதனால் சமூக மாற்றங்களுக்கு மத்தியில் பாரம்பரியம் இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

பெற்றோர்களுக்கு வயதாகும் பொது தெய்வத்துக்கு நிகரான பயபக்தியுடன் பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துவது 'பித்ர் தேவோ பவ’ என்னும் கொள்கையை எடுத்துக்காட்டும். இதன் மூலம் குழந்தைகள் பெற்றோர்களுக்கு உடல் மற்றும் உணர்ச்சி பூர்வமான ஆதரவை வழங்குவது அவர்களது கடமையாகும்.  

பெரியவர்களின் அனுபவமிக்க வழிகாட்டுதல்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் தூண்களாக விளங்குகின்றன. பெரியவர்கள் கலாச்சாரத்தை கற்றுத்தரும் பாதுகாவலர்களாக செயல்படுகிறார்கள். வரலாற்று கதைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை விளக்குவதன் மூலம் இவர்கள் சமூகத்தின்  முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவார்கள். 

அனுபவ அறிவுடன் வழிகாட்டுதல்

ஞானம் என்பது அனுபவ அறிவை பயன்படுத்தி நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை மதிப்பீடு செய்யும் ஆற்றல் என்று சொல்லலாம். பாரம்பரிய இந்திய குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் பல ஆண்டுகளாக சேகரித்து வைத்த வாழ்க்கை அனுபவத்தையும் ஞானத்தையும் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் இளைய குடும்ப உறுப்பினர்களுக்கு விலை மதிப்பற்ற நுண்ணறிவு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வாழ்க்கையின் சவால்களை கடந்து செல்ல உதவுகிறார்கள். 

கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல்

கலாச்சார மரபுகள், சடங்குகள் மற்றும் மதிப்புகளை பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பெரியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களது அறிவு குடும்பத்தின் கலாச்சாரத்தை பின் தொடரும் பழக்க வழக்கங்களை உறுதி செய்கிறது.

Elements Building
Elements Building

ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுக்கான முன் மாதிரி

குடும்பத்தின் தார்மீக நடத்தை மற்றும் நெறிமுறைகளுக்கு பெரியவர்கள் முன்மாதிரியாக செயல்படுகிறார்கள். அவர்களது செயல்கள் மற்றும் போதனைகள் மூலம் இளைய உறுப்பினர்களின் குணாதிசயங்களை வடிவமைக்கிறார்கள். இதன் மூலம் இளையவர்கள் நேர்மை, இரக்கம் மற்றும் மரியாதை போன்ற நற்பண்புகளை உள்வாங்கிக் கொள்கிறார்கள். 

குடும்ப மோதல்கள் தவிர்க்க முடியும்

பெரியவர்கள் குடும்பத்தில் இருக்கும் போது அவர்களது அனுபவமானது குடும்பத்தில் நல்லிணக்கம் மற்றும்  ஒற்றுமையை வளர்ப்பதற்கும், பாரபட்சம் இல்லாமல் சுமுகமாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உதவுகிறது. 

உணர்ச்சிகரமான ஆதரவு 

இளையவர்கள் துன்பமான சூழலை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் ஸ்திரத்தன்மையும் அளிக்கிறார்கள் குடும்ப பெரியோர்கள். இளையவர்களுக்கு பெரியவர்களின் இந்த ஆதரவு ஆறுதலை அளிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதனால் பாதுகாப்பாகவும் அக்கறையுடனும் வாழும் சூழல் உண்டாகிறது. 

தனிப்பட்ட பிணைப்பு

குடும்பத்தில் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதில் பெரியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கதை சொல்வது, அனுபவங்களை பகிர்வது, குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக நேரம் செலவிடுவது, குடும்ப உறுப்பினர்களிடையே சொந்தம் மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பது போன்றவை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கல்வி மற்றும் திறன் பரிமாற்றம்

பெரியவர்கள் தங்கள் வாழ்நாளில் அனுபவமிக்க அறிவாற்றல் மற்றும் சிறந்த திறன்களை கொண்டுள்ளனர். இளைய உறுப்பினர்களுக்கு தொழில் சார்ந்த மற்றும் கல்வி வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பெரியவர்கள் சிறந்த வழிகாட்டியாக செயல்படுகிறார்கள். இதன் மூலம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கும் உதவுகிறார்கள். 

நிதி திட்டமிடல் 

பெரியவர்கள் இருக்கும் குடும்பத்தில் நிதி நிர்வாகத்தில் விவேகம் மற்றும் தொலைநோக்கு உணர்வு இருக்கும். இவர்கள் அனுபவத்திலிருந்து குடும்பத்தின் பொருளாதார நல்வாழ்வை உறுதி செய்ய முடியும். அதற்கேற்ப பட்ஜெட், சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதி திட்டமிடல் போன்றவற்றில் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார்கள். 

சமூக ஈடுபாடு மற்றும் ஒற்றுமை

பெரியவர்கள் குடும்பத்தில் முக்கியமானவர்கள். சமூக நிகழ்வுகளில் அவர்களின் ஈடுபாடு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உறவினர்கள் நண்பர்களிடையெ தொடர்புகளை வளர்க்கிறது. உறவுகளை வலுப்படுத்துகிறது. 

மரபு மற்றும் தொடர்ச்சி

குடும்ப பரம்பரையின்படி, மரபு மற்றும் அதன் வழியை பின் தொடர்வதில் பெரியவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வருங்கால சந்ததியினர் இதை பின் தொடரும் வகையில் குடும்பத்தின் மதிப்புகள், மரபுகள் மற்றும் ஆசைகள்  நிலைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். 

இறுதியாக பாரம்பரிய இந்திய குடும்பங்களில் பெரியவர்களின் முக்கியத்துவமானது அவர்களது வயதில் மட்டும் அல்ல, அவர்கள் வழங்கும் விலைமதிப்பில்லாத அறிவாற்றல், வழிகாட்டுதல் போன்றவற்றிலும் வழிவழியாக தொடரும் வண்ணம் உள்ளது. கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகவும், குடும்ப உறவுகளின்  முக்கியமானவர்களாகவும் இருக்கும் பெரியவர்கள், இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டி இந்திய குடும்பங்களின் வேர்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை..." என்றார்.

logo
Kalki Online
kalkionline.com