மாணவமணிகளின் தனித்திறமைக்கு ஊக்கம்… தமிழக அரசின் முயற்சி!

மாணவமணிகளின் தனித்திறமைக்கு ஊக்கம்… தமிழக அரசின் முயற்சி!
Published on

ரசுப்பள்ளி மாணவ மாணவிகளின் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக பள்ளிகள் வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்களை நடத்த நம் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 07-12-2022 முதல் 10-12-2022 வரை நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. வந்து செல்ல வசதியாக நகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கியப் பள்ளிகளை போட்டிகள் நடக்கும் மையங்களாகக் கொண்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கான 150 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 15000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை காட்டுகின்றனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் இசை நடனம் நாடகம் பட்டிமன்றம் கட்டுரை கதை எழுதுதல்  ஓவியம் வரைதல்  இசைக்கருவி வாசித்தல் பேச்சுப் போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் புகைப்படம் எடுத்தல் விவாதங்கள் போன்ற பல வகையான போட்டிகளில் வெகு ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்கின்றனர் மாணவர்கள். வட்டார அளவில் முன்பே நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த மாவட்டட கலைத் திருவிழாவில் திறமையைக் காட்டி பரிசுகளை வெல்லலாம் . மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர்.   இதில் வெற்றி பெரும் மாணவமாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ் களுடன் கலையரசன் கலையரசி போன்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் தரவரிசை அடிப்படையில் இருபது மாணவ மணிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் சிறப்பும் பெறுவார்கள்.

ஆசிரியர்களின் கருத்து இது...” அரசின் இந்த முயற்சி எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிதும் சந்தோஷம் அளிக்கிறது. இருப்பினும் அரசுப்பள்ளி மாணவர்கள் பார்த்தே இராத பல போட்டிக்களை காணும்போது (புல்லாங்குழல் சாக்ஸபோன் கீபோர்டு கிளாரினெட் மிருதங்கம் போன்றவை) இதற்கான பயிற்சிகளை ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் ஏற்படுத்தி அதன் பின் மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் பல மாணவர்கள் மேலும் இப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்க்க உதவும் என்று தோன்றுகிறது என்கின்றனர்.

அரசின் முயற்சிகள் வெகுவாக பாராட்டப்பட வேண்டியது. எனினும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கருத்துக் களையும் ஏற்று முறைப்படியான பயிற்சிகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்க அரசு முன் வருமா?.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com