அன்றாடப் பணிகளை மன அழுத்தமின்றி செய்ய அவசியமான ஆலோசனைகள்!

Stress Relief Tips
Stress Relief Tips
Published on

லுவலக வேலை, வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகளைக் கவனித்தல் என தற்கால குடும்பப் பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்கள் என அனைவரும் ஒரு வகையான பரபரப்பில் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் அவர்களுக்குள் மன அழுத்தம் மற்றும் கவலைகள் உட்புகுந்து வேலை செய்வதில் சோர்வடையச் செய்யும். இம்மாதிரியான சூழ்நிலைகளில் அவர்கள் நிம்மதியாகவும் அமைதியுடனும் செயல்புரிவதற்கு உதவும் 9 ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.

1. மெடிடேஷன்: நாள் தவறாமல் தினமும் சிறிது நேரம் மெடிடேஷன் செய்வது மனதை அமைதிப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த உதவும்.

2. நிகழ் காலத்தில் வாழ்வது: நல்லதோ கெட்டதோ எதுவாயினும் இறந்த காலத்தில் நடந்தவற்றை முற்றிலும் மறப்பதும் எதிர்காலத்தைப் பற்றின பயமோ கவலையோ கொள்ளாமல் அன்றைக்கு நடப்பவற்றில் மட்டும் கவனம் செலுத்தி அன்றாட செயல்களை சிறந்த முறையில் செய்து முடிப்பது மிக்க நன்மை தரும். இதை நடைமுறைப்படுத்துவது சிரமம்தான் எனினும் முயற்சியாவது செய்யலாம்.

3. சூழ்நிலையை ஏற்றுக்கொள்வது: நமக்குப் பிடிக்காத முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விஷயங்கள் மீது குறை கூறிக்கொண்டிருக்காமல் அதை ஏற்றுக்கொண்டு இயல்பாய் இருப்பது, தேவை இல்லாத கவலைகளையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

4. பாசிட்டிவ் மைண்ட் செட்: மன அமைதிக்கும், பிரச்னைகளை சுலபமாக தீர்ப்பதற்கும் நேர்மறை எண்ணங்களை மனதில் அழுத்தமாக இறுத்திக்கொள்வது அவசியம். இது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடிய சூழலில் நாம் இருக்கும்போது கூட நம்மை ஊக்குவித்து நேர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள உதவும்.

5. இலக்கை அடைய உதவும் இடைவெளி: நாம் நிர்ணயித்துக் கொண்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் அடைவதில் அழுத்தம் உண்டாகும்போது, அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களை பகுதி பகுதியாகப் பிரித்து, இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக செய்து முடிப்பது வெற்றியை அடைய உதவும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் 7 உணவுகள்!
Stress Relief Tips

6. திட்டமிடுதல்: செய்ய வேண்டிய வேலையை எப்படிச் செய்வது என்று முன்கூட்டியே திட்டமிட்டு, திட்டமிட்டபடி செய்து முடிப்பது கடைசி நேர அழுத்தத்தைத் தவிர்க்க உதவும்.

7. ஆரோக்கியமான உணவு: நம் உடலையும் மனதையும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

8. தூக்கம்: ஒவ்வொரு இரவும் இடையூறில்லாத, தரமான ஏழு மணி நேரத்திற்குக் குறையாத தூக்கம் அனைவருக்கும் அவசியம்.

9. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி: ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியிடும் பயிற்சியை மேற்கொள்வது, எவ்வளவு மோசமான சூழ்நிலையில் நாம் இருந்தாலும் நம்மை அமைதிப்படுத்தவும் நம் மன நிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியாக வைக்கவும் உதவும்.

மேற்கூறிய 9 ஆலோசனைகளைப் பின்பற்றி நாமும் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்வு வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com