ஃபேஷன் டிரண்டி உடைகள் நம் லுக்கையே மாற்றக்கூடியது...!

ஃபேஷன் படிப்பிற்கு " பளிச் " எதிர்காலம் !
ஃபேஷன் டிரண்டி உடைகள் நம் லுக்கையே மாற்றக்கூடியது...!
Published on

ஆடை அலங்காரம் என்பது அடிப்படையில் ஓர் அழகுக்கலை. அதனால்தான் என்னவோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே ஆடை அலங்காரத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இன்றைய நவநாகரீக உலகில், விதவிதமான ஆடைகளை ஸ்டைலாக உடுத்தி மகிழ வேண்டும் என்ற ஆசை கிட்டதட்ட எல்லோரிடமும் இருக்கிறது. ஆடை அலங்காரம், பேஷன் டிசைனிங் விஷயத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் குறித்து சொல்லவே வேண்டாம். அவர்கள் கூடுதலாகவே கவனம் செலுத்துவார்கள்.

காலப்போக்கிலான ஃபேஷன் டிரண்டுகள் மிகவும் வேடிக்கையாகவும், கம்பீரமாகவும், அதே சமயம் மிகவம் வசதியாகவும் மாறிக்கொண்டே வருகின்றன. மேலும், ஃபேஷன் துறையில் தனக்கென ஒரு ரசிகர் , வாடிக்கையாளர் பட்டாளத்தையே வைத்து இருக்கும் ஃபேஷன் இன்ஃபளுயன்சர்கள் (fashion influencer) சில மலிவான பேஷன் டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார்கள்.

ஸ்கின்னி ஜீன்ஸ் (Skinny jeans) பெண்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆண்களின் மத்தியிலும் பிரபலமாக உள்ளது. இந்த டிரெண்ட் அன்று தொடங்கி இன்று வரை, ஸ்கின்னி ஜீன்ஸ் ஃபேஷன் துறையின் பிரபலமான பங்களிப்பாக அனைவருக்குமான ஒரு ஆடையாக திகழ்ந்து வருகிறது. அணிபவரின் உடலோடு இறுக ஒட்டிக்கொள்ளும் இவ்வகை ஜீன்ஸ், உருவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, கவர்ச்சிகரமான தோற்றத்திற்கும் உறுதி அளிக்கிறது.

தேர்தெடுக்கப்பட்ட ஆடைகளை அணிவது மட்டுமே ஃபேஷன் டிரண்டுகளாகி விடாது. தற்கால ஃபேஷன் போக்கில் அக்ஸசெரீஸ்கள் (Accessories) ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்கால இளசுகள், ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி, தொப்பிகள், ஸ்க்ரன்சிஸ்களை (scrunchies) வளையல்களாக அணிவது, பிரிண்ட் பேக்ஸ் மற்றும் என்னன்னவோ அணிகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு அவுட்ஃபிட் ஆனது ஒரு அக்ஸசெரீஸ் இல்லாமல் முழுமையடைவதே இல்லை.

இதன் காரணமாக, தற்போது ஃபேஷன் டிசைனிங், ஃபேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளில் சேரும் ஆர்வம் இளையதலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஃபேஷன் தொடர்பான படிப்புகள் மாணவிகளை அதிகமாகவே ஈர்க்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்து நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஃபேஷன் டிசைன் படிப்புகள் தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், தற்போது அனைத்து தரப்பினருமே சேர்ந்து படிக்கக்கூடிய படிப்பாக ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் மாறிவிட்டன. படைப்பாற்றல், கற்பனைத்திறன்-இவைதான் இப்படிப்புக்கு அடிப்படை தேவை. இவ்விரண்டு திறன்களும் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம். நிறைய சாதிக்கலாம்.

இப்படிப்பை முடிப்பவர்கள் ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர் என பல்வேறு பொறுப்புகளில் பணியில் சேரலாம். மேலும், ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில் ஃபேஷன் டிசைன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

தனியார் துறையில் மட்டுமின்றி அரசு பணி வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. மத்திய, மாநில அரசுகளில் கைத்தறி துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். நிறைய மேற்படிப்பு வாய்ப்புகளும் இருக்கின்றன. எம்பிஏ ஃபேஷன் மேனேஜ்மென்ட், எம்.டிசைன் (மாஸ்டர் ஆப் டிசைன்), எம்எப்டெக் (ஃபேஷன் டெக்னாலஜி) படிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com