மாமனாரும் இன்னொரு தந்தைதான்!

ஜூலை 30, தேசிய மாமனார் தினம்
தேசிய மாமனார் தினம்
தேசிய மாமனார் தினம்https://sheroes.com
Published on

மாமியார்களைப் பற்றி நிறைய பேசும் நாம், மாமனார்கள் குறித்து அவ்வளவாக பேசுவதில்லை. மாமனார் தினம் கொண்டாடப்படுவது குறித்த எந்த வரலாறும் பெரிதாகக் காணப்படவில்லை என்றாலும் அப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிதானே!

குடும்ப உறவில் கணவன், மனைவியைத் தாண்டி மாமியார் உறவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாமியார் வீட்டுக்குப் போறேன், மாமியார் வீட்ல இன்னைக்கு விருந்து, என் மாமியார் கொடுத்தது, என் மாமியாருக்கு ரொம்பப் பிடிச்சது, என் மாமியார் ஒரு மாதிரி என்று மாமியார் புராணம்தான் இதுவரை பேசி வந்துள்ளோம்.

பெரும்பாலான ஆண்கள் பந்தா காட்டும் இடமாக இன்றும் மாமனார் வீடுதான் இருந்து வருகிறது. அதுவே, மனைவிக்கு கணவனின் அம்மா (மாமியார்) சிறிது முறுக்கு காட்டினாலும், பெரும்பாலான மாமனார்கள் மருமகளுடனான உறவு நல்ல முறையிலேயே இருந்து வருகிறது.

முன்பெல்லாம் குடும்ப உறவில் பிரச்னை வந்தால் அது குறித்து ஆராயாமல் மருமகன் மீது, மருமகள் மீது குறை கூறி விடுவார்கள். ஆனால், காலம் மாறிய இன்றைய நிலையில் பெரும்பாலான மாமனார்கள் மருமகளுக்கும், மருமகனுக்கும்  ஆதரவாகப் பேசி நல்ல பெயரை தட்டிச் செல்கிறார்கள். எல்லா மாமனார்களும் மருமகள் வடிவில் ஒரு நல்ல மகளையும், மருமகன் வடிவில் ஒரு நல்ல மகனையும் எதிர்பார்க்கிறார்கள்.

தேசிய மாமனார் தினமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் இன்று நம் மனதுக்குப் பிடித்த மனைவியை வளர்த்துக் கொடுத்த மாமனாருடன் ஹேங் அவுட் செய்யுங்கள். அவருடன் சேர்ந்து இரவு உணவை உண்ணலாம். அவருக்குப் பிடித்த திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லலாம். நாம் அவர் மீது காட்டும் அக்கறை அவருக்குப் புரியும் வகையில் நடந்து கொண்டு அவர் விரும்பும் மாப்பிள்ளையாக வலம் வரலாம். அதேபோல், மாமனார் விரும்பும் மருமகளாகவும் வலம் வரலாம்.

இதையும் படியுங்கள்:
மாதுளை ஜூஸ் குடிக்கக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?
தேசிய மாமனார் தினம்

அப்பாக்கள் எல்லோரும் மாமனாராக முடியும். ஆனால், சில மாமனார்கள் மட்டுமே அப்பாவாகவும் ஆகிறார்கள். அந்த வகையில் மாமனார்களை அப்பாக்களாகப் பெற்ற ஒவ்வொரு மருமகளும், மருமகனும் பெரும் பாக்கியசாலிகளே!

இந்தக் காலத்து மாப்பிள்ளைகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மாமனார்களை பெரும்பாலும் படுத்துவதில்லை. பெருந்தன்மையுடன்தான் நடந்து கொள்கிறார்கள். அதேபோல் மாமனார்களும் மாப்பிள்ளையுடன் பிரண்ட்லியாகத்தான் பழகுகிறார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com