பாலில் கலப்படத்தை ஈசியா கண்டுபிடித்து விடலாம்!

Adulteration in milk
Adulteration in milk
Published on

‘கலப்படம்’ என்ற சொல் இப்பொழுது மலிந்து விட்டது. கலப்படங்களால் நம் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சீர்கேடு உண்டாகி வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் பால். பாலில் கலப்படம் செய்திருப்பதை எல்லோராலும் பரிசோதித்துப் பார்த்து முடிவு செய்ய முடியாது. ஆனாலும், ஒருசில எளிய வழிகளைக் கொண்டு பாலில் உள்ள கலப்படத்தை நாம் கண்டறிந்து விடலாம். அது என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாலில் பவுடர் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிவதற்கு நீங்கள் பாலை 2 முதல் 3 மணி நேரம் காய்ச்ச வேண்டும். உண்மையான கலப்படமற்ற பாலாக இருந்தால் ஸ்மூத் க்ரீம் போல பால் கெட்டி நிலை அடையும். இது ஆரோக்கியமான பால். அதுவே, கல் போல கெட்டி நிலை அடைந்தால் அதில் பவுடர் கலப்படம் இருக்கிறது என எளிதாக அறியலாம்.

பாலில் நீர் கலப்பை மிக எளிதாகக் கண்டறியலாம். பாலை சற்றே சாய்வான பகுதியில் ஓரிரு துளிகள் ஊற்றினால் அது ஒரு பாதை போன்று ஓடினால் நீர் கலப்பு இருக்கிறது என அர்த்தம். அதுவே பாதை போன்று ஓடாமல் ஓரிரு துளிகள் சற்றே சாய்வான பகுதியிலும் தேங்கி நின்றால் அது உண்மையான கலப்படமற்ற பால்.

நாம் வாங்கும் பாலில் மாவு கலப்படம் இருக்கிறது என்பதை அறிய, ஒரு கரண்டி பாலில் ஓரிரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்தால், அதில் நீல நிற வட்டங்கள் தோன்றினால், அது மாவு கலப்படம் செய்யப்பட்ட பால். நீல நிற வட்டங்கள் தோன்றாவிட்டால் அது உண்மையான கலப்படமற்ற பால் என்பதை அறியலாம்.

பாலில் பெவிகால் அல்லது சோப்பில் சேர்க்கும் வகையிலான கெமிக்கல் கலப்பு செய்திருப்பதை அதன் ருசியை வைத்தே கண்டறியலாம். பாலை கைகளில் ஊற்றி தேய்த்தால் சோப்பு நுரை போன்று வெளிப்படும். மேலும், இதை சூடு செய்தால் மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த இரண்டு முறைகளில் சிந்தடிக் பாலை கண்டறியலாம்.

இதையும் படியுங்கள்:
முதுமையை தள்ளிப்போடும் சூப்பர்ஃபுட் பழம் புளூபெர்ரி!
Adulteration in milk

பாலில் யூரியா கலப்பு உள்ளதைக் கண்டறிவது மிகவும் கடினம். நீண்டநாள் பதப்படுத்தி வைத்தாலும், பாலின் ருசி மாறாமல் இருக்க இதை பயன்படுத்துகின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது. இந்த வகை பாலுடன் நீங்கள் சோயாபீன் பவுடர் கலந்து ஷேக் செய்து, லிட்மஸ் (Litmus) பேப்பர் டிப் செய்தால், அந்த லிட்மஸ் பேப்பர் சிவப்பு நிறத்தில் மாறும். இதை வைத்து பாலில் யூரியா கலப்பு உள்ளதைக் கண்டறியலாம்.

பாலில் ஃபார்மலின் (formalin) கலப்பு இருக்கிறதா என்பதை அறிய, நீங்கள் பாலில் சல்ஃபூரிக் அமிலத்தை கலக்க வேண்டும். கலந்த பிறகு பாலில் நீல நிற வட்டங்கள் உருவானால், பாலில் ஃபார்மலின் கலப்பு இருக்கிறது என அறியலாம். இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் தினமும் பாலில் எந்த வகையான கலப்படம் செய்யப்படுகிறது என்பதை எளிதாக அறியலாம். கலப்படமற்ற பாலே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. முடிந்த அளவுக்கு எளிய முறைகளைக் கடைபிடித்து கலப்படங்களை கண்டறிந்து அதிலிருந்து தப்பித்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com