வீட்டு வேலை சுலபமாக முடிய இத follow பண்ணுங்க மக்களே!

வீட்டு வேலை சுலபமாக முடிய இத follow பண்ணுங்க மக்களே!
Published on

வீடு சுத்தம் பண்ணும் வேலையை அட்டவணை போட்டுக்கொண்டு
செய்யலாம். உதாரணத்திற்கு…

தினசரி -

டீ.வி., பிரிட்ஜ், பீரோவின் மேல் பாகம் இவற்றைத் தூசு தட்டிய பிறகே வீடு பெருக்குதல் (etc.)

வாரா வாரம்-

ஒரு நாள் தண்ணீரில் பினாயில் போட்டு வீடு துடைத்தல், சாமி படங்கள் துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்தல், வாஷ் பேஸின் கழுவுதல் (சிறிது சோப் ஆயில் போட்டு). (etc.)

மாதம் ஒரு முறை

1ம் தேதி : குளியலறை, சமையலறை சிங் (பேஸின்) முதலியவற்றுக்கு ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்தல். அடுப்பு மேடை, டைல்ஸ் இவற்றை சோப் ஆயில் போட்டுத் துடைத்தல்.

2ம் தேதி : ஜன்னல், கதவுகளை தூசு போக துடைத்தல், ஒட்டடை அடித்தல்.

3ம் தேதி : ஷெல்பில் பேப்பர் மாற்றுதல், அதிலுள்ள பொருட்களைத் துடைத்து வைத்தல்.

4ம் தேதி : பெட்ஷீட், தலையணை உறை,  டீ.வி. கவர், ஸ்கிரீன் சோபா கவர் முதலியவற்றைக் கழற்றி வேறு போடுதல்.

5ம் தேதி : வீட்டை சோப் ஆயில் போட்டு நன்றாகக் கழுவி விடுதல்.

(இது போல் அனைத்து நாட்களுக்கும் அட்டவணை போட்டுக்கோங்க...)

3 மாதங்களுக்கு ஒருமுறை :

1. பீரோவிலுள்ள (கபோர்ட்) துணி மணிகள் மற்றும் இதர சாமான்களைப் பிரித்து நாப்தலின் பால்ஸ் (அந்து ருண்டை) போடுவது.

2. ஸ்டோர் ரூம் சாமான்களைச் சரி பார்த்து வெய்யிலில் (தேவைப்பட்டால்) காயப் போடுவது.

இப்படி அட்டவணை போட்டுச் செய்வதால் வீட்டு வேலை கஷ்டம் போயே போச்சு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com