குளிர்கால மனச்சோர்வை எதிர்கொள்ள உதவும் உணவுகளும், பழக்க வழக்கங்களும்!

Foods and Habits to Combat Winter Depression
Foods and Habits to Combat Winter Depressionhttps://www.onlymyhealth.com
Published on

பொதுவாகவே, குளிர்காலத்தில் உடலின் எனர்ஜி லெவல் குறைவாகவே இருக்கும். பிடித்த வேலைகளை செய்வதில் கூட ஆர்வமின்மை, காலையில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று தோன்றும். இந்த மனநிலை, சிலருக்கு மன அழுத்தமாக மாறும். இதற்கு, ‘விண்டர் ப்ளூஸ்’ என்று பெயர். ஆனால், உணவில் சில விஷயங்களை மாற்றுவதன் மூலம் குளிர்காலத்தில் கூட சுறுசுறுப்பாக செயல்படலாம்.

விண்டர் ப்ளூஸ் அறிகுறிகள்: ஒருசிலருக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும். குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் சிலருக்கு எதிலும் ஆர்வமின்மை, மூட் ஸ்விங்க்ஸ், சோர்வு, தூங்குவதில் மாற்றம், நீண்ட நேரம் தூங்க வேண்டும் போன்ற உணர்வு, பசி உணர்வில் மாற்றம், எதிலும் கவனம் செலுத்த முடியாமை போன்றவை விண்டர் ப்ளூஸ் அறிகுறிகள்.

விண்டர் ப்ளூஸ் அறிகுறிகளை குறைக்க உதவும் உணவுகள்: ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் மன நிலையை மேம்படுத்தும் மற்றும் அழற்சி-எதிர்ப்பு தன்மை கொண்டவை. சால்மன், மத்தி மீன் வகைகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளது.

வைட்டமின் பி நிறைந்த உணவுகள்: மூளையின் செயல்பாடுகளுக்கும், மனநிலையை சீராக வைப்பதற்கும் வைட்டமின் பி சத்து மிகவும் அவசியம். தானியங்கள், கொட்டை வகைகள், பச்சை காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் லீன் புரதம் ஆகியவற்றில் வைட்டமின் பி நிறைந்துள்ளது.

வைட்டமின் டி உணவுகள்: வைட்டமின் டி உணவுகள் மனதில் ஏற்படக்கூடிய ஏற்ற, இறக்கங்களை சீராக்கி சமநிலையில் வைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், உடலில் இயற்கையாக தூங்கும் மற்றும் விழிக்கும் சைக்கிளை ரெகுலேட் செய்யவும் உதவும். குளிர்காலத்தில் வெயில் குறைவாக இருப்பதால் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், முட்டை, மீன், காளான் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

ட்ரிப்டோஃபான்: ட்ரிப்டோஃபான் என்பது ஒரு வகையான அமினோ ஆசிட் ஆகும். இதை உடல் பயன்படுத்தி, மனநிலையை சீரமைக்கும். செரோடொனின் என்ற ஹார்மோனை சுரக்க உதவுகிறது. பால், சீஸ், வெண்ணெய், டர்க்கி சிக்கன் போன்ற உணவுகளில் ட்ரிப்டோஃபான் அதிகம் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒருவர் மிக அதிகமாக நேசிக்க வேண்டிய நபர் யார் தெரியுமா?
Foods and Habits to Combat Winter Depression

விண்டர் ப்ளூஸ் அறிகுறிகளை குறைக்க உதவும் பழக்க வழக்கங்கள்:

1. எந்த காலமாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வது எனர்ஜி லெவலை அதிகரிக்க உதவும். அது மட்டுமில்லாமல் சோர்வாக இருக்கும் மனநிலையையும் இது மேம்படுத்தி உற்சாகம் அளிக்கும்.

2. குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாக இருக்கும். அதாவது, சூரியனின் ஒளி ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனவே, முடிந்த அளவு சூரிய ஒளி உடல் மேல் படும்படி வெளிப்புறத்தில் நேரம் செலவிட வேண்டும். இது மனநிலையை மேம்படுத்தி உடலின் இயற்கையான தூக்கம், விழிப்பு சுழற்சியை சீராக்கும்.

3. போதுமான அளவு தூங்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு கிடைக்கும் பொழுது மன அழுத்தம் குறையும்.

4. குளிர் காலத்திற்கு ஏற்றாற்போல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

இந்த முறைகளைப் பின்பற்றி விண்டர் ப்ளூஸின் அறிகுறிகளில் இருந்து விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com