முதுமைக்கு முட்டுக்கட்டை போடும் உணவுகள்!

முதுமைக்கு முட்டுக்கட்டை போடும் உணவுகள்!

னிதர்கள் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயம் முதுமை. அந்த முதுமை ஒருசிலருக்கு வெகு சீக்கிரமே அவர்களின் வாழ்க்கையில் வந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு தாமதமாக வருகிறது. விரைவாகவோ அல்லது தாமதமாகவோ முதுமை என்றாலே பலருக்கும் மனக் கஷ்டம்தான். ஆனால், இயற்கையை யாராலும் தள்ளிவைக்க இயலாது என்பதுதான் நிஜம்; நிதர்சனம். ஆனாலும், சிலவகை உணவுகளை தினசரி வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும்போது சராசரி வாழ்க்கையில் வரவேண்டிய முதுமையை உடலளவிலும், மனதளவிலும் சற்று தள்ளிப்போட முடியும். அதுபோன்ற சில உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.

* ஒமேகா 3 என்னும் அமிலம், சருமம் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. அதனால் இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல் தோற்றம் மற்றும் சுறுசுறுப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

* கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் நாள்பட்ட வியாதிகளின் தாக்குதலைத் தடுக்கிறது.

* பசலை, காலே போன்ற கீரைகளில் உள்ள வைட்டமின் K உட்பட்ட பல வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் எலும்புகளைப் பலப்படுத்தி, உடலில் வீக்கத்தைத் தடுக்கும்.

* கேரட், சிவப்பு குடைமிளகாய், ஸ்வீட் பொடட்டோ போன்ற காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் கொண்டவை. இவை உடல் செல்கள் அழிவதைத் தடுத்து சருமத்தையும் பாதுகாக்கிறது.

* குயினோவா, பிரவுன் ரைஸ், கோதுமை, ஓட்ஸ் போன்றவை கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, ஊட்டச் சத்துக்கள் நிறைந்தவை. இவை ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கவும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

* டார்க் சாக்லேட்டிலுள்ள பிளவோனாய்ட்ஸ் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.

* வால்நட், முந்திரி, பாதாம் பருப்புகளிலுள்ள நல்ல கொழுப்புகள் அறிவாற்றலை அதிகரிக்கவும், சரும பராமரிப்புக்கும் உதவுகிறது.

* யோகர்ட் உண்பதற்கேற்ற நுண்ணுயிரிகள் அடங்கிய பால் பொருள் ஆகும். இது உணவு செரிமானத்துக்கும், சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும் உதவுகின்றன.

* பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவற்றில் அடங்கியுள்ள தாவர வகை புரோட்டீன், நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் தசை வளர்ச்சிக்கும், உடலுக்கு  சக்தி கொடுக்கவும் பயன்படுகின்றன.

* வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.

மேற்கூறிய ஆரோக்கிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து உண்போம்; இளமையோடிருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com