😱அடடா! என் பழைய வீடு இப்படி மாறிடுச்சா? இந்த ஒரு ஐடியாவுக்கு முன்னாடி கோடீஸ்வரன் வீடே தோற்றுப் போயிடும்!

House renovation
House renovation
Published on

வீடு புதுப்பித்தல் என்பது செயல்பாடு, அழகியல் மற்றும் நம் வீட்டில் உள்ள சொத்து மதிப்பை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாகும். சரியான திட்டமிடலுடன் நம் வீட்டிற்கு ஒரு புதிய தோற்றத்தை இதனால் கொடுக்க முடியும்.

வீடு புதுப்பித்தல்: கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் (House renovation: Key things to consider):

வீடு புதுப்பிக்கும் பொழுது முதலில் நம் இலக்குகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். புதுப்பித்தலின் நோக்கத்தை தெளிவாக வரையறுத்துக் கொண்டு திட்டத்தை இறுதி செய்ய வேண்டும். பிறகு செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு விரிவான பட்ஜெட்டுகளை வகுக்க வேண்டும். நம் வீட்டின் அடிப்படை கட்டமைப்பை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.

பிறகு தகுந்த ஒப்பந்தக்காரரை தேர்வு செய்யவும். கட்டமைப்பு பொறியாளர் அல்லது உள்ளக வடிவமைப்பாளரின் உதவியை நாடுவது சிறந்த முடிவுகளைப் பெற உதவும். புதுப்பிப்பதற்கு தேவையான அரசு அனுமதி பெற வேண்டியிருந்தால் அதற்காக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் வாஸ்து, மின்சாரம், பிளம்பிங் போன்ற அனைத்து முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவும்.

குறைந்த பட்ஜெட்டில் வீடு புதுப்பித்தல் (House renovation on a budget):

  • வீடு புதுப்பித்தல் திட்டமிடலுக்கு ஒரு விரிவான பட்ஜெட் திட்டத்தை உருவாக்குவது அவசியம். அதிக செலவு செய்வதைத் தடுக்க, நிதியை திறம்பட ஒதுக்கலாம்.

  • பழைய மரச்சாமான்களை புதுப்பித்து பயன்படுத்தலாம். அதிக ஜன்னல்கள் இருந்தால் கட்டுமான செலவு அதிகமாகும். எனவே வீட்டுக்குள் சூரிய ஒளி வரும் இடங்களில் மட்டும் ஜன்னல்களை அமைத்து ஜன்னல்களின் அளவை அதிகரிக்கலாம்.

  • அத்யாவசியமானவற்றை மட்டும் புதுப்பிக்க வேண்டும். இதற்கு மலிவு விலையில் வீடு புதுப்பித்தல் சேவைகளை வழங்கக்கூடிய நிபுணர்களின் உதவியைப் பெறலாம்.

  • புதிய பொருட்களை வாங்குவதற்கு பதிலாக தற்போதுள்ள பொருட்களைப் புதுப்பித்து மீண்டும் பயன்படுத்தலாம்.

  • சிறிய அளவிலான திட்டங்களை செய்தல், தேவையற்ற அலங்காரங்களைத் தவிர்ப்பது, பழைய பொருட்களை புதுப்பிப்பது, ஆற்றல் திறன்மிக்க தீர்வுகளை பயன்படுத்துதல் போன்ற பல வழிகளை பின்பற்றுவதன் மூலம் குறைந்த பட்ஜெட்டிலும் நம் வீட்டை வெற்றிகரமாக புதுப்பிக்க முடியும்.

வீடு புதுப்பித்தலின் வெவ்வேறு வகைகள் (Different types of house renovation):

  1. முழுமையான புதுப்பிப்பு (Total Renovation): இது நம் வீட்டின் கட்டமைப்பு மாற்றங்கள், மின்சாரம், பிளம்பிங் மற்றும் அலங்கார மாற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.

  2. அறைவாரியான புதுப்பிப்புகள் (Room Specific Renovations): சமையலறை, குளியலறை அல்லது வாழ்க்கை அறையை மட்டும் புதுப்பிப்பது இந்த வகையில் அடங்கும்.

  3. கட்டமைப்பு மேம்பாடுகள் (Structural Improvements): நம் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு கூடுதல் அறையை சேர்ப்பது, மாடியை அதிகரிப்பது அல்லது வீட்டின் தளவமைப்பை மாற்றுவது ஆகியவை இதன் கீழ் வருகின்றன.

  4. அலங்கார மேம்பாடுகள் (Aesthetic Upgrades): வீட்டின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தரை அமைப்பது, வண்ணம் அடிப்பது அல்லது தற்போதைய அலங்காரத்தை மாற்றுவது போன்றவற்றை இது உள்ளடக்கியது.

  5. ஆற்றல் திறன் மேம்பாடுகள் (Energy Efficiency Upgrades): மோசமான இன்சுலேஷனை மாற்றுவது, ஆற்றல் சேமிப்பு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பொருத்துவது அல்லது ஆற்றல் திறனுள்ள சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவை இவற்றில் அடங்கும்.

4) வீடு புதுப்பித்தலுக்கான DIY குறிப்புகள் (DIY house renovation tips):

DIY திட்டங்கள் செலவுகளை குறைக்க உதவும் ஆனால் சில பணிகளுக்கு நிபுணர்களின் உதவியும் தேவைப்படலாம். சுவர் பேனல்கள் (Wall Panelling) சேர்ப்பது, DIY ஹெட்போர்டுகள் (Headboards) உருவாக்குவது, மலிவு விலையில் வால்பேப்பர்களைப் பயன்படுத்துவது, ஆற்றல் திறனுள்ள விளக்குகள்(LED lights) மற்றும் சோலார் பேனல்கள் (solar panels) போன்ற மேம்பாடுகளைச் செய்வது மற்றும் தேவைப்பட்டால் ஒரு நிபுணரின் உதவியை நாடி, பணத்தை சேமிப்பது போன்ற பல வழிகளில் நம் வீட்டை புதுப்பிக்க முடியும்.

சுவர் பேனல்கள் விலை உயர்ந்ததாகத் தோன்றினாலும் நாமே செய்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம். படுக்கையறைக்கு பிரம்மாண்டமான ஹெட்போர்டை, வால்பேப்பரை பயன்படுத்தி தரையிலிருந்து கூரை வரை உருவாக்கலாம். சுவர்களுக்கு வால்பேப்பர்களை பயன்படுத்துவது சுலபமான மற்றும் மலிவான வழியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com