பெண்களிடம் இந்த 6 குணங்கள் இருந்தால் போதும்.. அவர்களது துணை அதிர்ஷ்டசாலி!

Good Qualities of Women.
Good Qualities of Women.
Published on

ஒரு குடும்பம் நிம்மதியாக இருப்பதற்கு, கணவன் மனைவி இருவருமே பங்களிக்க வேண்டும். என்னதான் கணவன் குடும்பத்திற்காக உழைத்தாலும், குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் பெண்கள்தான். ஏனென்றால் பெண்கள் மூலமாகவே ஒரு குடும்பத்தின் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே இந்தப் பதிவில் ஒரு பெண்ணுக்கு எத்தகைய குணங்கள் இருத்தல் வேண்டும் என்பது பற்றிப் பார்க்கலாம். 

1. அமைதியான பெண்கள்: பொதுவாகவே அமைதியாக இருக்கும் பெண்களை அனைவருக்குமே பிடிக்கும். அமைதியாக இருக்கும் பெண் ஒருவருக்கு துணையாக வந்துவிட்டால், அந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இன்றி அமைதி நிலவும் என சொல்லப்படுகிறது. கோபம், அவசரம் போன்ற விஷயங்களை வீட்டின் அமைதியைக் கெடுக்கும் என்பதால், அனைத்தையும் அமைதியாகக் கையாலும் பெண்ணால் குடும்பம் வேகமாக முன்னேறும். 

2. பணத்தை சேமிக்கும் பெண்கள்: பொதுவாகவே பெண்கள் என்றாலே வீண் செலவு செய்பவர்கள் என்ற பிம்பம் உள்ளது. ஆனால் எந்த பெண் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளாரோ, அவரை மனைவியாகப் பெறுபவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. அத்தகைய பெண்கள் குடும்ப நிதி சிக்கல்களை சிறப்பாக கையாளும்போது, கணவனுக்கும் குடும்பத்திற்கும் உறுதுணையாக இருப்பார்கள். இதனால் கணவனின் மன உளைச்சல் தவிர்க்கப்படுகிறது.

3. சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் பெண்கள்: எல்லா பெண்களும் தங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இருக்க முயற்சிப்பதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் ஒரு பெண் தனது சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் ஆசையை மாற்றியமைக்கும் விதத்தில் இருந்தால், அது குடும்பத்திற்கும் கணவனுக்கும் மிகவும் நல்லதாகும். எல்லா சூழ்நிலைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு குடும்பத்தை நேர்வழியில் கொண்டுசெல்ல இது பெரிதும் உதவும். 

4. சகிப்புத்தன்மை உள்ள பெண்கள்: சகிப்புத்தன்மை என்பது, கெட்ட தருணங்களையும் முறையாகக் கையாளப் பயன்படுவதாகும். இத்தகைய பெண்கள் எல்லாவிதமான கடின காலங்களையும் திறம்பட நிர்வகிப்பார்கள். வாழ்க்கைத் துணையை விட்டு ஒருபோதும் விலகி இருக்க விரும்ப மாட்டார்கள். இப்படிப்பட்ட மனைவியின் ஆதரவு ஒரு கணவனுக்குக் கிடைத்தால், எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்தும் அவனால் விடுபட முடியும். 

இதையும் படியுங்கள்:
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலமும், சமூகத் தாக்கங்களும்! 
Good Qualities of Women.

5. இனிமையாக பேசும் பெண்கள்: ஒருவர் பேசுவதை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். எனவே இனிமையாக பேசக்கூடிய பெண்ணை மணமுடிக்கும் ஆணின் வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும். இனிமையாக பேசுபவர்களுக்கு எல்லா இடங்களிலும் மரியாதை கிடைக்கும் என்பதால், புகுந்த வீடு, பிறந்த வீடு என எல்லா இடங்களிலும் அவர்களால் கௌரவமாக இருக்க முடியும். 

6. படித்த பெண்கள்: படித்து நல்ல பண்பட்ட பெண் ஒருவனுக்கு மனைவியாக வந்தால், அந்த குடும்பத்தில் ஏற்படும் எல்லா விதமான விஷயங்களையும் அவர் சமாளிக்கும் மன தைரியத்துடன் இருப்பார். இதனால் கணவனுடன் சேர்ந்து மனைவியும் குடும்பத்திற்கு உறுதுணையாய் இருந்து, செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும். அத்தகைய பெண்கள் தெளிவானவர்கள் என்பதால், குடும்பத்திற்கான முடிவுகளையும் சிறப்பாக எடுப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com