மன அழுத்தத்தைப் போக்கும் மகிழ்ச்சி செடிகள்!

டென்ரோபியம் செடிகள்
டென்ரோபியம் செடிகள்
Published on

வாஸ்து சாஸ்திரத்தில் சில செடிகள் நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. அவை பண செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த செடிகள் காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை. காற்றில் கலந்திருக்கும் நச்சுக்களை அகற்றி வீட்டின் உள்புறம் உலவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன.

இந்தச் செடிகளுக்கு குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதற்கு சூரிய ஒளி வாரத்தில் ஒரு நாள் மட்டும் தேவைப்படும். வெயிலிலும் நிழலிலும் எத்தகைய ஒளி நிலையிலும் இவை செழித்து வளரும் தன்மை கொண்டவை. இதன் வளர்ச்சிக்கு தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும்.

இந்தச் செடிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும் உண்டு. இதன் அருகில் அமர்ந்து நேரத்தை செலவிடுவது மனதுக்கு ஓய்வு அளிக்கச் செய்யும். அமைதியான சூழலையும் உருவாக்க இவை உதவும். இந்த உள் அலங்கார செடி பசுமை சூழலையும் நம்மை உணரச் செய்வதோடு, கண்களுக்கும் குளிர்ச்சி அளிக்கும். இவற்றை நமக்குப் பிடித்த இடங்களில் வைத்து வளர்க்கலாம். இரவில் ஆக்சிஜனை வெளியிட்டு நம் கண்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

அந்தூரியம் மற்றும் பீச் லில்லி செடிகள்
அந்தூரியம் மற்றும் பீச் லில்லி செடிகள்

இந்தப் பதிவின் முதலில் மேலே உள்ள செடிகள் மூன்றும் டென்ரோபியம் தாவர வகைகளில் ஆர்க்கிட் வகையைச் சார்ந்தது. அந்தூரியம், வகையைச் சார்ந்த செடிகள் இரண்டாவது படத்தின் அடித்தட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக இருப்பவை. பீச் லில்லி அடித்தட்டில் முதலில் இருப்பதாகும்.

அந்தூரியம் தண்டை எடுத்து அதன் இலைகளை நறுக்கி ஓர் இலை மொட்டை தண்டுக்குள் விடவும். ஒரு சில வாரங்களில் செடியின் வேர் வளரும் வகையில் பானையின் அடிப்பகுதிக்கும் வெட்டிய பகுதிக்கும் இடையே சிறிது தொலைவு இருக்கும் வகையில் கட்டிங்கை நடவும். தொட்டியின் அடியில் நீர் வழிய ஓட்டை இருப்பது அவசியம்.

பிறகு தொட்டியில் களிமண் எருவை நிரப்பி தொடர்ந்து தண்ணீர் விட்டு வரவும். அதன் பிறகு செடியை வறண்டு விடாமல் பார்த்து கோடையானால் மூன்று முறையும், சாதாரண நாட்களில் இரண்டு நாளும் தண்ணீர் விட்டால் போதுமானது.

இந்த செடிகளை காலையில் எழுந்து வந்து பார்க்கும்பொழுது ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அது சிறிது சிறிதாக வளரும் முன்னேற்றத்தை பார்க்கும்பொழுது நாமும் அவ்வாறு முன்னேற வேண்டும் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தும். இதுபோன்ற செடிகளை எல்லோரும் அதிக அளவில் இல்லை என்றாலும் குறைந்த அளவில் வளர்த்து இன்பம் அடையலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com