பயனுள்ள மின்  சிக்கன குறிப்புகள்!

பயனுள்ள மின் சிக்கன குறிப்புகள்!

Published on

குளிர், கோடை என்று இரண்டு பருவங்களிலும் மின் தேவை அதிகம். குளிரில் கெய்சர் போடுவோம். கோடையில் ஏசி. இது மட்டுமா வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், அயன் பாக்ஸ், லைட் ஃபேன் , அவன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு நாள் கரண்ட் கட் ஆகிவிட்டால், வீட்டில் உள்ள வேலைகள் அத்தனையுமே ஸ்தம்பித்து விடும். அதனுடன் கரண்ட் பில் எகிர்வதைப் பார்த்து நமக்கு ஷாக் அடிக்கும். 

அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனங்களை, நாம் கையாள வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றினால்  கணிசமான அளவு குறைக்கலாம். அதற்கான  பிரத்தியேக குறிப்புகள் இதோ இதோ:

வீட்டிற்குள் வெளிர் நிறத்தில் பெயின்ட் அல்லது டிஸ்டம்பர் அடித்தால்தான் வெளிச்சம் அதிகமாக கிடைக்கும். அடர் நிறங்கள் ஒளியை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உடையது என்பதால் ஒன்றுக்கு இரண்டு விளக்குகள் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். 

ங்கு வேலை செய்கிறீர்களோ அங்கு மட்டும் விளக்கு எரியட்டும். கிச்சனில் சமைக்கும் போது ஹாலில் எதற்கு இரண்டு விளக்குகள். படிக்கும்போது டேபிள் விளக்கை பயன்படுத்தினால் மின்சாரமும் மிச்சமாகும். அறையில் தூங்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு இருக்காது. 

மின் விசிறியில் வேகத்தையும் சிக்கனத்தையும் நிர்ணயிப்பது அதன் எடைதான். குறைந்த எடை உடைய மின்விசிறிகளை உபயோகிங்கள். அதன் பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும். அதில் அழுக்குகள் சேர்ந்தால் காற்று குறைவாக வரும். மின் இழப்பும் அதிகமாகும். 

ரெகுலேட்டரே இல்லாமல் மின்விசிறி பொருத்தாதீர்கள். இப்படி ரெகுலேட்டர் இல்லாமல் நாள் முழுக்க ஒரு மின்விசிறி ஓடினால் வீணாகும் மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு யூனிட். மாதத்துக்கு 30 யூனிட் வீண். பெரிய பெட்டி போன்ற ரெகுலேட்டர்களுக்கு பதிலாக எலக்ட்ரானிக் ரெகுலேட்டரை உபயோகிப்பதால் மின் செலவு குறையும். 

செல்போன், லேப்டாப்  போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் பிளக்கை மின்சார இணைப்பிலிருந்து எடுத்து விடுங்கள். என்னதான் சார்ஜ் முழுக்க ஏறி இருந்தாலும் அதில் மின்சாரம் கடந்து கொண்டே தான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன் மின்சாதன பொருட்களுக்கு சேதமும் உண்டாகலாம். 

யன் பாக்ஸை பயன்படுத்தும்போது துணிக்கு ஏற்ற வெப்பத்தை கொடுக்க வேண்டும். இதற்காக அயன் பாக்ஸில் உள்ள பட்டனை பயன்படுத்தத் தவறினால் இழப்பு நமக்குத்தான். உதாரணமாக  நைலக்ஸ் துணிக்கான வெப்பத்தை பயன்படுத்தி காட்டன் டிரஸ் அயன் செய்தால் ஒரு முறைக்கு இருமுறையாக தேய்க்க வேண்டியது இருக்கும்.

குளிப்பதற்காக ரொம்ப நேரம் முன்பாக ஹீட்டரை போட்டு வைக்க வேண்டாம். தண்ணீர் அளவுக்கு அதிகமாக சூடாகிவிடும். குளிர்ந்த நீரை அதிகமாக கலந்து பயன்படுத்துவோம். குளித்த பிறகு வெந்நீர் மிச்சமாகி இருக்கும். இதனால் கணிசமான அளவு மின்சாரம் செலவாகும். இன்ஸ்டன்ட் ஹீட்டரை பயன்படுத்தினால் குளிக்கும் போது ஹீட்டரை ஆன் செய்தால் போதும் உடனே தண்ணீர் சூடாகும். குளித்ததும் நிறுத்தி விடலாம். 

ழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீரை வீட்டு ஓவர் டேங்கிற்கு எடுத்துச் செல்லும் மின் மோட்டார் பம்பும் அதிக திறன் உள்ளதாகவும், குறைவான மின்சாரத்தை உறிஞ்சுவதாகவும் இருக்க வேண்டும் .மோனோ பிளாக் பம்புகள் அதிக செயல் திறன் மிக்கவை என்பதால் முடிந்த வரை அவற்றை பயன்படுத்துவது நல்லது. 

டேங்கில் இருந்து வழிந்தோடிக் கொண்டே இருந்தால் விரயம் அது தண்ணீர் மட்டுமல்ல. மின்சாரமும் தான். டேங்கில் நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க தானியங்கி கட்டுப்பாட்டு கருவியை பயன்படுத்தவும். தண்ணீர் நிறைந்ததும் தானாகவே மோட்டாரை இது நிறுத்தி விடும். 

வீட்டில் ஹாலில் இருக்கும் கம்ப்யூட்டர் சத்தம் இல்லாமல் நிறைய மின்சாரத்தை உறிஞ்சும் என்கிற விஷயம் பலருக்கு தெரிவதில்லை. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று ஒரு பெரிய சைஸ் பிரிட்ஜை விட அதிக மின்சக்தினை உறிஞ்சுகிறது. எனவே பயன்படுத்தாத நேரங்களில் கம்ப்யூட்டரை ஆப் செய்து வைப்பதே நல்லது.

க்ஸாஸ்ட் ஃபேன் உடல் நலத்திற்கு அவசியம். ஆனால் அது தேவையில்லாமல் இயங்குவது தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தாலே அறையில் உள்ள புகை வெளியேறும். 

கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலும் அழுக்கு காரணமாக இறுக்கமாக இருந்தாலும் அதிக நேரம் ஓட்ட வேண்டிய நிலை உருவாகும். அதனால் மின் அளவு அதிகரிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பெல்ட்டை மாற்றி விடுவது நல்லது. 

ந்த மின்சாதனத்தையும் ரிமோட் மூலம் மட்டும் நிறுத்தாமல், பிளக் பாயிண்ட் ஸ்விட்சை நிறுத்தினால் மட்டுமே மின் நுகர்வு முழுமையாக நிறுத்தப்படும். 

ஏசி அறைகளில் மேலே தெர்மாகோல் கூரை சுவற்றில் வெப்பம் கடத்தா பெயிண்ட் பூச்சு மற்றும் தரை விரிப்புகள் பயன்படுத்தினால் அதிக நேரம் அறைக்குள் குளிர்ச்சி நிற்கும். மின் நுகர்வு குறையும். 

ஃப்ரிட்ஜை அடிக்கடி அடைத்து வைக்க வேண்டியதில்லை. அது தேவையான குளிர்ச்சி அடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஆனால் அடிக்கடி திறந்து மூடினாலும் தேவையான கொள்ளளவை விட பெரிய பிரிட்ஜ் பயன்படுத்தினாலும் உள்ளே பாத்திரங்களை திறந்து வைத்தாலும் அதிக மின்சாரம் செலவாகும். பிரிட்ஜ் மீது நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. ஃப்ரிட்ஜின் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறு வைத்தால் மின் நுகர்வு குறையும். 

வாஷிங் மெஷின் டிரையரை வெயில் நாட்களில் தவிர்க்க வேண்டும். துவைப்பதற்கு பயன்படும் மின்சாரத்தின் அளவே ட்ரையருக்கும் தேவைப்படுகிறது. இது இரண்டு முறை துவைப்பதற்கு ஆகும் மின்செலவுக்கு சமம்.. 

வெளியூர்களுக்கு செல்லும் நேரத்தில் மெயின் ஸ்விட்ச்சை நிறுத்திவிட்டு சென்றால் மிகவும் நல்லது. 

மின் பயன்பாட்டை "சிறுதுளி பெருவெள்ளம்" போல் சேமித்தால் ஒவ்வொரு முறை மின் கட்டணம் உயரும் போதும் நமக்கு ஷாக் அடிக்காமல் அதிலிருந்து தப்பிக்கலாம். 

logo
Kalki Online
kalkionline.com