உங்கள் குழந்தையின் IQ லெவலை உயர்த்தும் 5 வழிகள் இதோ!

IQ Level
IQ Level

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் புத்திசாலிகள் தான். ஒரு சிறு வித்தியாசம் என்னவென்றால் ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் தங்களது புத்திசாலித்தனத்தையும், அறிவையும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் 1,330 திருக்குறள்களையும் அர்த்தத்துடன் மிக எளிதாக சொல்லி விடுவார்கள். சில குழந்தைகள் எப்பேற்பட்ட கணக்குகளையும் தீர்த்து விடுவார்கள். சில குழந்தைகள் உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை வார்த்தை மாறாமல் சொல்லி விடுவார்கள். இப்படி ஒவ்வொரு குழந்தையும் சிறப்பாகச் செயல்பட அவர்களின் ஐக்யூ லெவல் தான் காரணம். ஆனால், எல்லா குழந்தைகளுக்கும் இந்த ஐக்யூ லெவல் ஒரே மாதிரி இருக்காது.

தங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பமாகும். ஆனால், குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அதன் வழியில் செல்ல பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளால் மிக எளிதாக தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஐக்யூ லெவல் குறைவாக இருக்கும் குழந்தைகள் படிப்பில் சரிவர கவனம் செலுத்த மாட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கு வேறு திறமைகள் நிச்சயமாக இருக்கும். இப்படியான குழந்தைகளின் ஐக்யூ லெவலை அதிகரிக்க சில பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

1. கணிதம்:

சிறு வயதில் இருந்தே எளிமையான கணக்குகளைப் போட குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் இவர்களின் சிந்திக்கும் திறனும், ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

2. விளையாட்டு:

குழந்தைகளை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவியாக இருப்பது விளையாட்டு தான். மூளையின் செயல்திறனை அதிகரிக்க விளையாட்டு துணைபுரிவதால், குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் ஐக்யூ லெவல் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!
IQ Level

3. இசைக் கருவிகள்:

இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்ளும் போது, குழந்தைகளின் மூளை முழுவதுமாக செயல்படும். இப்பயிற்சியில் சிறுசிறு நுணுக்கங்களை கற்றறிய வேண்டும் என்ற ஆவல் அதிகமாகும். இதனால், குழந்தைகளின் மூளை அனைத்து விஷயங்களிலும் பகுத்தறிந்து செயல்பட முற்படும்.

4. மூச்சுப் பயிற்சி:

தினந்தோறும் மூச்சுப்பயிற்சி செய்வது உடல்நலத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்திறனுக்கும் நல்லது. தினந்தோறும் காலையில் 10 நிமிடங்களாவது மூச்சுப்பயிற்சி செய்வதால் செயல்திறன் அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், உங்கள் குழந்தைகளுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை பழக்கி விடுங்கள்.‌

5. புதிர்கள்:

சிந்தித்து செயல்படும் புதிர் விளையாட்டுகளை தினந்தோறும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது குழந்தைகள் விளையாட வேண்டும். இதன் மூலம் புதுப்புது விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற பக்குவம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும்.

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளரும் பருவத்தில் இருந்தே அதிகரிக்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். மேற்கண்ட சில பயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தால், உங்கள் குழந்தையின் செயல்பாட்டில் நிச்சயமாக மாற்றம் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com