

‘எது எது எங்கே இருக்க வேண்டுமோ அது அது அங்கே இருப்பது அனைவருக்கும் நல்லது’ என்பதுபோல் சில பொருட்கள் சுவற்றை (Wall) விட்டு தள்ளி இருப்பது நன்மை தரும். அதை தெரிந்து கொள்வோம்.
தளபாடங்கள், மின்சாதனங்கள், சுவர்கள் பெரும்பாலும் ஈரப்பதத்தைத் தக்கவைத்து (trap moisture), காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தி (limit airflow), தூசியைச் சேகரிக்கின்றன. எனவே, அதற்கு அருகே ஏதேனும் பொருள் இருந்தால் அதை எதிர்மறையாக பாதிக்கும். எடுத்துக்காட்டாக அலமாரிகள், படுக்கைகள் போன்ற மர தளபாடங்களை (Furniture) சுவர்களுக்கு அருகே இறுக்கமாக வைக்கக்கூடாது.
மரம் பொருட்கள் ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி, சிதைவு (Damage), பூஞ்சை வளர்ச்சி (fungal growth) அல்லது கரையான் தொல்லைக்கு வழிவகுக்கும். எனவே, இதற்கு நடுவில் ஒரு சிறிய இடைவெளியை அனுமதிப்பது சுவர், பொருட்களுக்கு இடையே தேவையான காற்றோட்டத்தை உறுதி செய்கிறது, கூடவே தளபாடங்களின் ஆயுளையும் நீடிக்கிறது.
அதேபோல் குளிர்சாதன பெட்டிகள் (Fridge), சலவை இயந்திரங்கள் (Washing machines) அல்லது தொலைக்காட்சிகள் (TV) போன்ற மின்னணு சாதனங்களைச் சுவர்களை ஒட்டி நிலை நிறுத்தக்கூடாது. இந்தச் சாதனங்கள் இயல்பாக வெப்பத்தை உருவாக்குகின்றன. ஆகவே, இதற்கு சரியான காற்று சுழற்சிக்கான(proper air circulation) இடம் தேவைப்படுகின்றன. இதை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்மறையாக அவற்றின் செயல்திறனைக் குறைத்து சாதனங்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கும்.
மெத்தை மற்றும் காகிதப் பொருட்கள் மென்மையான பொருட்களான மெத்தைகள்(mattresses) அல்லது மெத்தையுடன் வரும் நாற்காலிகள் (upholstered chairs) போன்ற மென்மையான தளபாடங்கள் சுவர்களுக்கு அருகே வைக்கும்போது அவை ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதன் விளைவாக அதில் உருவாகும் பூஞ்சை (Fungus) மூலம் விரும்பத்தகாத நாற்றங்கள் ஏற்படும்.
இது அதில் பயன்படுத்தியுள்ள துணியை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்துகிறது. சுவரில் அல்லது சுவருக்கு அருகில் புத்தகங்கள், காகிதப் பொருட்கள் இருந்தால், அந்த பொருட்களில் நிறமாற்றம்(discolor) வரலாம் அல்லது பூஞ்சை(develop mildew) உருவாக வழிவகுக்கும். எனவே, அதற்குத் தகுந்த அலமாரிகளில் அவற்றைச் சேமிப்பது அவற்றின் சிதைவைத் தடுக்கிறது.
உலோக பொருட்கள், உணவுகள் மிதிவண்டிகள், கருவிகள்(Tools) அல்லது அலங்கார பொருட்கள் போன்ற உலோகப் பொருட்களைக்கூட சுவற்றை விட்டு சற்று தள்ளி வைக்க வேண்டும். சுவர்களுடன் இதன் தொடர்ச்சியான தொடர்பு குறிப்பாக ஈரப்பதமான சூழல்களில் அவற்றில் துருப்பிடித்தலை (Rusting) துரிதப்படுத்துகிறது.
இதோடு சமையலறைகளில் உணவு பாத்திரங்கள் (food containers) அல்லது பேக் செய்யப்பட்ட பொருட்களைச் சுவர்களுக்கு அருகே வைக்கக்கூடாது. ஏனெனில் சுவரிலிருந்து ஊடுருவும் வெப்பம் அல்லது ஈரப்பதம் உணவுப் பொருட்களை வேகமாகக் கெட்டுப்போக (spoil contents faster) வைக்கலாம்.