வீட்டில் உள்ள இந்த 4 பொருட்கள் போது; ஈஸியா ரூம் பிரஷ்னர் செய்யலாம்!

வீட்டில் உள்ள இந்த 4 பொருட்கள் போது; ஈஸியா ரூம் பிரஷ்னர் செய்யலாம்!

பெண்களோ, ஆண்களோ பலரும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். வேலைக்கு செல்வது, பள்ளிக்கு செல்வது என நாம் வியர்வை சிந்தி வீட்டுக்கு வந்தவுடன் நம் மீது துர்நாற்றம் அடிக்கும். நம் உடலை சுத்தம் செய்ய நாம் தினமும் குளித்து விடுகிறோம். அப்படி வீட்டில் உள்ள துர்நாற்றத்தை போக்க தினமும் நம்மால் வீட்டை கழுவ இயலாது. அதுவும் வேகமாக ஓடி கொண்டிருக்கும் இந்த காலங்களில் வீட்டை தினசரி கழுவுதல் என்பது சாத்தியமற்றது.

இதனால் மக்கள் பலரும் டாய்லர், ரூம், பெட்ரூம் என தனித்தனியாக ரூம் ப்ரஷ்னர் மாட்டி கொள்கின்றனர். அது பெர்பியூம் வடிவிலும் கிடைக்கிறது. நாள் கணக்கில் சுவரில் தொங்கும் வடிவிலும் கிடைக்கிறது. மேலும் சிலர் தினமும், பத்தி, சாம்பிராணியை பயன்படுத்துவார்கள். ஆனால் இது அத்தனையும் கெமிக்கல்தான். இதனால் பலருக்கும் சுவாச பிரச்னைகூட ஏற்படும். இனி கவலை வேண்டாம், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ரூம் பிரஷ்னர் செய்வது எப்படி என பார்க்கலாம்.

கடைகளில் கொடுக்கப்படும் சட்னி டப்பாவே போதும். அந்த டப்பாவின் மூடியில் சிறுது சிறுதாக ஓட்டை போட்டு கொள்ளுங்கள். பிறகு அந்த டப்பாவில் சிவப்பு கல்லு உப்பை போட்டு கொள்ளுங்கள். இல்லாதவர்கள் வெள்ளை கல்லு உப்பு கூட பயன்படுத்தலாம். அதன் மேல் துணியை அலச தினசரி பயன்படுத்தும் கம்போர்ட் பாக்கெட் ஒன்றை உடைத்து ஊற்றவும். பிறகு அதில் 6 துண்டு கிராம்பு, 3 சூடம் சேர்ந்து மூடி வைக்கவும். அவ்வளவுதான் சுலபமான ரூம் பிரஷ்னர் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com