தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை நாரான cocopeat எடை குறைவாகவும், பொலபொலப்பு தன்மை உள்ளதாலும், ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு, மழைக்காலங்களில் தொட்டிகளில் நீர் அதிகளவில் தேங்கி வேர்கள் அழுகாமல் பாதுகாக்கும் என்பதால் மாடிதோட்டங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த cocopeat வீட்டிலேயே தயாரிக்கும் எளிய 3 முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
உரித்த தேங்காய் மட்டையில் இருந்து சிறு சிறிதாக கையால் பிரித்து தேங்காய் நாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது தேங்காயுடன் வரும் நாரையும் எடுத்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு கோகோபீட் (Cocopeat) தயாரிக்க நேரம் இல்லை என்றால், ஒரு பிரச்சனையும் இல்லை! உடனே வாங்க...
1. அரிவாள் முறை
தேங்காய் நார் கையளவு எடுத்துக்கொண்டு ஒரு மரக்கட்டையில் வைத்து அரிவாளால் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக சிறிது சிறிதாக அரிவாளின் அடி பாகத்தை வைத்து, மேலும் கீழும் மாறி மாறி துண்டாக வேண்டும். குறைந்த நேரத்தில் அதிக அளவு cocopeat தயாரிக்க இந்த முறை தான் சிறந்தது.
2. கத்தரிக்கோல் முறை
அரிவாள் பயன்படுத்த தெரியாதவர்கள் கத்தரிக்கோலால் தேங்காய் நாரை சிறிது சிறிதாக கட் பண்ணலாம். இந்த முறை பாதுகாப்பானது என்றாலும் குறைந்த அளவு கோக பீட் தயாரிக்கக்கூட நேரம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. கத்தி முறை
ஒரு கட்டையில் கையளவு தேங்காய் நாரை வைத்து காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை பயன்படுத்தி சிறிது சிறிதாக வெட்டலாம்.
இவ்வாறு வெட்டிய தேங்காய் நாரிலிருந்து கொட்டும் துகள்களை தனியாகவும், நார் தனியாகவும் சல்லடையை வைத்து பிரித்துக் கொள்ள வேண்டும். சல்லடையின் மேலே இருக்கும் நார் plant bag ன் அடிப்பகுதியில் பயன்படுத்தலாம்.
துகள்களை மென்மையாக்கும் முறை:
பிரித்தெடுத்த துகள்கள் கடினமாகவும், உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதால் அதனை ஒரு பாத்திரத்தில் துகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றியவுடன் துகள்கள் மேலே மிதக்கும் என்பதால் கை வைத்து நன்கு அழுத்தி 10 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து செடி வைக்க தேவையான மென்மையான cocopeat தயாராகிவிடும்.
குறிப்பு : கடையில் வாங்கும் cocopeatயை தண்ணீரில் உலர்த்தி காய வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். அப்படியே பயன்படுத்தினால் heat generate ஆகி செடியை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு கோகோபீட் (Cocopeat) தயாரிக்க நேரம் இல்லை என்றால், ஒரு பிரச்சனையும் இல்லை! உடனே வாங்க...