வீட்டிலேயே காதலர் தினப் பரிசுகளைச் செய்யலாம் வாங்க!

Homemade Valentine's Day Gifts
Homemade Valentine's Day GiftsImge credit: Photojaanic singapore

காதலர் தினத்தன்று என்னத்தான் பரிசுகளைக் கடைகளில் வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் நம் கைகளினால் செய்து கொடுப்பதே ஒரு தனி சிறப்புத்தான். அந்தவகையில் வீட்டிலேயே காதலர் தினப் பரிசுகளை எப்படி செய்வது எனப் பார்ப்போம்.

காதலனுக்கானப் பரிசுகள்!

1. Vacation memory box:

உங்களுடைய காதலன் பயணம் செய்வதை மிகவும் விரும்பினால் கட்டாயம் இந்த பரிசைக் கொடுக்கலாம். அதாவது ஒரு நீள் சதுரப் பெட்டியில் நீங்கள் இருவரும் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள், அந்த இடங்களின் புகைப்படங்கள், இனி செல்ல விரும்பும் இடங்களின் புகைப்படங்களை அழகாக வைத்து பரிசைத் தயார் செய்யலாம்.

2. Beard oil:

பொதுவாக ஆண்களுக்கு தங்கள் தாடியை சீராக வைத்துக்கொள்வது மிகவும் பிடித்தமான விஷயம். ஆகையால் வீட்டிலேயே இயற்கைப் பொருட்களை வைத்து அவருக்குப் பிடித்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தி Beard oil செய்து கொடுக்கலாம்.

3. One-year pre planned date:

உங்களின் பிசியான வேலைகளில் காதலனுடன் செலவிடுவதற்கு நேரத்தை ஒதுக்குவது அவசியம். ஆகையால் ஒரு அட்டையை கீச்செயின் வடிவில் வெட்டி வைத்து, அதில் அடுத்த ஒரு வருடத்தில் நீங்கள் இருவரும் செல்ல வேண்டிய இடங்களையும், நேரத்தையும் எழுதி, கீ செயின்கள் போல் செய்து பரிசாகக் கொடுங்கள். ஒவ்வொரு முறை சென்று வந்தப் பிறகு அந்த கீ செயினை நியாபக அர்த்தங்களாக சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.

காதலிக்கானப் பரிசுகள்:

1. Candy wreath:

உங்களுடைய காதலிக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும் என்றால் இந்த ஐடியா ஏற்ற ஒன்று. பிடித்த சாக்லெட்டுகளை வாங்கி இதய வடிவில் செய்து பரிசளிக்கலாம்.

2. Love coupon booklet:

கூப்பன் வடிவிலான பேப்பரில் உங்கள் புகைப்படங்களைக் கார்ட்டூன் வடிவில் சிறிது சிறிதாக வரைந்து கொடுக்கலாம். அதேபோல் நீங்கள் சொல்ல வேண்டிய சில வார்த்தைகளையும் அழகாக எழுதிக் கொடுக்கலாம்.

Book planters
Book planters

3. Book planters:

உங்கள் காதலி புத்தகங்களையும் தாவரங்களையும் விரும்புபவராக இருந்தால், இதை செய்துக்கொடுங்கள். அதாவது பழைய புத்தகத்தில் நடுவில் சதுரமாக வெட்டி எடுத்து, அந்தப் பக்கங்களை கம் வைத்து ஒட்டி விட வேண்டும். வெட்டி எடுத்த இடத்தில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து நடுவில் மணல் கொட்டி சிறிய சிறிய தாவரங்களை வைத்துக் கொடுக்கலாம். இது ஒரு சிறப்பான பரிசாகும்.

கணவனுக்கான பரிசுகள்:

1. Messages in a Bottle:

உங்கள் கணவரிடம் இதுவரை சொல்லாத பல சுவாரசியமான விஷயங்களை எழுதி ஒரு பாட்டிலில் போட்டு அதைப் பரிசாக அளிக்கலாம்.

2. A movie kit:

படங்கள் பார்க்கும்போது சாப்பிடும் அனைத்து தின்பண்டங்கள், ஒரு பெரிய பாப்கார்ன் ஆகியவற்றைக் கொடுக்கலாம். அதேபோல் படம் வரைய உதவும் clip board ஐ நீங்களே செய்துக்கொடுக்கலாம். அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாரு எழுதிக்கொடுக்கலாம்.

movie kit
movie kit

3. Lottery bouquet:

ஒரு கண்ணாடி பாட்டிலின் உள்ளே சில சில்லறைகளை போட்டு அதன் மேல் சிறிதளவு மணலை நிரப்ப வேண்டும். பின்னர் சில குச்சிகளில் உங்கள் காதல் வார்த்தைகளை எழுதி ஒட்டி மனலில் வைத்து கொடுக்கலாம்.

மனைவிக்கான பரிசுகள்:

1. Jewelry dish:

நகைகள் வைப்பதற்கென ஒரு சிறு அழகான மற்றும் வண்ணமயமான பெட்டி செய்துக்கொடுக்கலாம்.

2. Painting Bag:

அதாவது ஒரு கருப்பு நிற பேக் வாங்கி அதில் உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தைகளின் கைகளின் வெள்ளை நிற அச்சை (வெள்ளை நிற பெயின்ட்டில் கை வைத்து) வைத்துக்கொடுக்கலாம். பின் அவருடைய கையையும் அச்சு வைத்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
Valentine's Day 2024 - காதலனுக்கான காதல் வரிகள்!
Homemade Valentine's Day Gifts

3. Love map:

நீங்கள் சென்ற இடங்களையெல்லாம் மேப்பில் குறிப்பிட்டு அந்த பகுதியை மட்டும் வெட்டி எடுத்து ஒட்டிக் கொடுக்கலாம். அதை மேலும் புகைப்படங்களால் அலங்கரித்தும் கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com