G Payவில் தவறுதலாக யாருக்காவது பணம் அனுப்பி விட்டால் அதை திரும்ப மீட்பது எப்படி?

Gpay
Gpay
Published on

கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சேவைகளை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அப்படி ஜி பேயில் பணம் அனுப்பும்போது தவறுதலாக நாம் வேறு யாருக்காவது பணத்தை அனுப்பி விட்டால் அதை எப்படித் திரும்பப் பெறுவது என்று பார்க்கலாம்.

நாம் ஒருவருக்கு பணத்தை அனுப்ப வேண்டி ஜி பேயில் பணம் அனுப்பும்போது போன் நம்பரில் தெரியாமல் ஒரு நம்பரை மாற்றிப் போட்டால் கூட வேறு ஒருவரின் அக்கவுண்டிற்கு அந்த பணம் சென்று விடும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி தவறான பண பரிமாற்றம் நடந்தால் 24 முதல் 48 மணி நேரத்தில் நம் பணம் திரும்ப கிடைத்துவிடும். அதிலும் குறிப்பாக, பணம் செலுத்துபவர் மற்றும் பணம் பெறுபவர் வங்கிகளில் ஒரே வங்கியாக இருந்தால் பணத்தைத் திரும்பப் பெற குறைந்த நேரமே ஆகும். ஆனால், இரண்டு வங்கி கணக்குகளும் வெவ்வேறாக இருந்தால் பணத்தைைதிரும்பப் பெற சிறிது நேரமாகும்.

இதற்காக npci.org.in என்ற அரசு இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு UPI complaint என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதனுள் Transaction என்ற ஒரு காலம் இருக்கும். அதில் Select issue type என ஒன்று இருக்கும். அதில் incorrectly transferred to another account என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 24 மணி நேரத்தில் நம் புகாரை சரி பார்த்து அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம், குடிக்கக் கூடாது? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Gpay

கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். 2022ம் ஆண்டு கூகுள் வாலட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஜிபே உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

கூகுள் வாலட் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இதுவரை180 நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் கூகுள் பேவுக்கு பதிலாக கூகுள் வாலட்டை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஜூன் நான்காம் தேதி முதல் உலகின் சில நாடுகளில் கூகுள் பே செயலியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி முதல் அமெரிக்காவில் கூகுள் பே நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com