கோடைக் காலத்தில் வீட்டின் ஒவ்வொரு அறையையும் எப்படி இயற்கையாக குளிர்வாக வைக்கலாம்?

Summer
Summer
Published on

கோடைக்காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க என்னதான் குளிரூட்டி (AC) ஒரு சிறந்த தீர்வாக இருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. சில இடங்களில் அதை வைக்கமுடியாது. அப்போ எப்படி நம் வீட்டின் எல்லா அறையிலும் வெப்பத்தை விரட்டி, குளிர்வான சூழ்நிலையை இயற்கையான முறையில் வரவழைக்க முடியும்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

 சமையலறை:

சமையலறையில் அடுப்புகளை (Stoves) அதிக அளவில் பயன்படுத்துவதால் அங்கு நிற்பவர்களுக்கு வெப்பம் அதிகமாக உணரப்படும். அதற்கு எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust fan) அல்லது சிம்னிகளை (chimney) நிறுவுவது, வெப்பமான காற்று மற்றும் புகையை வெளியேற்றி, காற்றோட்டத்தை உறுதி செய்து அசௌகரியத்தைத் தடுக்கிறது.

பின் மென்மையான வண்ணத்  திரைச்சீலைகளை (Light-colored curtains) ஜன்னல்களில் பயன்படுத்துவது சூரிய ஒளியைச் சிறிது தடுத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. துளசி போன்ற சிறிய உட்புற செடியை வீட்டினுள் வைப்பது காற்றின் தரத்தை சற்று மேம்படுத்தும்.

குளியலறைகள்:

குளியலறைகளில் கோடையில் உணரப்படும் வெப்பத்தைவெளியேற்ற எஸ்ஸாஸ்ட் விசிறி (Exhaust fan) முக்கியப் பங்கு வைக்கிறது. சாதாரண விரிப்புகளுக்கு (Mats) பதிலாக பருத்தி (Cotton) அல்லது மூங்கில் (Bamboo) மேட்களைப் பயன்படுத்துவது மிகச் சிறந்தது. குளித்துவிட்டு வெளியே வரும்போது நம்மைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். உச்சி வெயில் அடிக்கும் மதியம் நேரங்களைத் தவிர்த்து காலை மற்றும் மாலை வேளையில் ஷோவெர் (Shower) பயன்படுத்தி வெப்பத்தைத் தணியுங்கள்.  

படுக்கையறைகள்:

படுக்கை அறைகளில் பருத்தி (Cotton) அல்லது காதி (Khadi) போன்றவற்றால் செய்யப்பட்ட படுக்கை துணிகளை (Bed sheets) பயன்படுத்துவது நம் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவும். இதுபோக உங்களால் முடிந்தால் மின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு கிண்ணத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டுவிட்டு அறையின் இரு மூலையில் அதைக் கட்டி மின்விசிறியின் கீழ் தொங்கவிட்டுப் பாருங்கள். ஐஸ் கரைந்தாலும் அதன் குளிர் நீண்ட நேரம் அறையில் பரவிக்கொண்டிருக்கும்.    

 ஹால்:

ஹால் அல்லது லிவிங் அறையில் வெப்ப காற்று சுழற்சியைப் பராமரிக்க மின்விசிறிகள் அதிகம் இருப்பது மிகவும் அவசியம். இதுபோக உட்புறத்தில் வைக்கப்படும் மணி செடிகள்(Money plants) அல்லது பாம்பு செடிகள் (Snake plants) போன்ற உட்புற தாவரங்களைச் சேர்ப்பது காற்றைச் சுத்தப்படுத்தவும் குளிர்ச்சியான சூழலையும் பராமரிக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
எஸ்கலேட்டரில் ஏன் பிரஷ்கள் வச்சிருங்காங்க?
Summer

பூஜை அறை: 

பூஜை அறை கோடையில் குளிர்ச்சியாக இருக்க நீங்கள் லைட் நிற ஸ்கிரீன்ஸ் (Light coloured screens) பயன்படுத்தலாம். தியானம் செய்யும் வேளையில் அசௌகரியத்தைத் தடுக்க ஒரு சிறிய மின்விசிறியையும் நிறுவலாம். துளசி போன்ற உட்புற தாவரங்களையும் இந்த அறையில் வைக்கலாம்.

பால்கனி(Balcony):

பந்தல்கள் (Awnings) அல்லது மூங்கில் சிகிரீன்ஸ் (Bamboo blinds) போன்ற நிழலுக்கான கட்டமைப்புகளை இங்கு நிறுவலாம். அருகில் சிறிய பானையில் வளர்க்கப்படும் செடிகளை வைக்கலாம். உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்கு இலகுரக (Light weighted) மரப் பொருட்களைப் பயன்படுத்துவது சற்று அங்குள்ள வெப்பத்தைத் தணிக்க உதவுலாம்.

சாப்பாடு உண்ணும் அறை, Study ரூம் மற்றும் என்னென்ன அறைகள் உங்கள் வீட்டில் உள்ளதோ மேலே குறிப்பிட்ட இந்த வகையான  மாற்றங்களை செய்து, கோடை காலத்தின் உக்கிரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ... அலுமினியம் ஃபாயில் ஆபத்தாச்சே! உணவுகளை பாதுகாப்பான முறையில் பாக் செய்ய...
Summer

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com