
பெரிய ஹோட்டல்களில் நல்ல நறுமண சென்ட் வாசனை கமழும். எலுமிச்சையில் இயற்கையான எண்ணெய் உள்ளன. ஒரு சிறிய மண்பானையில் எலுமிச்சை தோல்களைச் சேருங்கள். அதில் ரோஸ்மேரி எண்ணை சில துளிகள் அல்லது பட்டை துண்டு சேர்க்கவும் இதை அடுப்பில் சிறிதாக வைத்து சூடு செய்யவும். இதிலிருந்து வரும் நறுமணம் வீடு முழுவதும் பரவும். நீங்கள் எலுமிச்சை தோலைக் காயவைத்து பொடி செய்து சிறு பைகளில் வைக்க, அவை வைக்கும் இடங்கள் வாசனையாக இருக்கும். இது வீட்டை இயற்கை முறையில் நறுமணம் சேர்க்கும் வழி.
எலுமிச்சை தோலில் அமிலத்தன்மையும், ஆன்டி பாக்டீரியல் எதிர்ப்பு பண்பு உள்ளதால் க்ளீனிங் ஏஜென்டாக செயல்படுகிறது. ஒரு ஜாடியில் எலுமிச்சை தோல்களை போட்டு அதில் வெள்ளை வினீகர் சேர்க்கவும் இரண்டு வாரங்கள் அப்படியே மூடி வைத்துவிடவும்.
இதனால் வினீகர் எலுமிச்சையின் எண்ணையை உறிஞ்சும். இதை ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து பாதி அளவு தண்ணீருடன் கலந்து உங்கள் அலமாரிகள், சிங்க் வாஷ் பேசின் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்ய அவை பளீரென்று ஆகும். அதோடு நறுமணமும் வீசும். இதனால் கெமிகல் இல்லாத சுத்தமான க்ளீனிங் செய்யலாம்.
எலுமிச்சை தோல்களை நன்கு காயவைத்து பொடி செய்யவும். இதை சாலடுகளிலும் மற்றும் சமைக்கும் காய்கறிகளிலும் பயன்படுத்தலாம். இது நல்ல சுவை தரும். ஒரு கைப்பிடி எலுமிச்சை தோலை மைக்ரோவேவ் ஜாரில் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பினுள் வைத்து 3 நிமிடங்கள் சூடுபடுத்த இது அடுப்பின் உள்ளே உள்ள கறையை போக்கும். பிறகு ஒரு ஸ்பான்ஜால் நன்கு துடைக்கவும்.
எலுமிச்சை தோல்களை பானங்களில் சேர்க்கலாம். நீங்கள் தேனீர் தயாரிக்கும்போது ஒரு எலுமிச்சை துண்டை சேர்க்கலாம். வேறு ஜுஸ் வகைகளிலும் இதை சேர்க்க நல்ல சுவை கிடைக்கும். இப்போது வெயில் காலம் என்பதால் பானை தண்ணீரில் இவைகளை சேர்க்க நல்ல நறுமணம் மிக்க ஆரோக்கியமான தண்ணீரை அருந்தலாம். உடலுக்கு மிகச்சிறந்தது.