இயற்கை நறுமணப் பொருட்களை நாமே எப்படி உருவாக்குவது?

Natural fragrances
Natural fragrancesImg Credit: Freepik

நாம் அனைவரும் நம்மை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள பல ஸ்பிரே வகைகளை உடலில் அடித்து கொள்வோம். அது பொதுவாக ஒரு நாள் வரை தாக்குபிடிக்கும். ஆனால் திறந்தவெளி கட்டிடங்களுக்கு இந்த வகை செயற்கை ஸ்பிரேக்கள் பத்தாது. நம் வீடுகளில் இயற்கையான நறுமணத்தை எவ்வாறு கொண்டு வரலாம் என்பதை பார்ப்போம்.

ரீட் டிஃப்பியூசர்( Reed Diffuser) எண்ணெய்:

  • உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயை (லாவெண்டர், தேயிலை மரம் அல்லது யூகலிப்டஸ் போன்றவை) ஒரு சிறிய, குறுகிய கழுத்துடைய கண்ணாடி பாட்டிலில் சில துளிகளைச் சேர்ப்பதன் மூலம் நீங்களே உங்கள் சொந்த ரீட் டிஃப்பியூசரை உருவாக்கலாம்.

  • பேபி ஆயில் அல்லது பாதாம் போன்ற எண்ணெய்களை மீதமுள்ள பாட்டிலில் நிரப்பவும்.

  • பிரம்பு டிஃப்பியூசர் குச்சிகளை பாட்டிலின் உள்ளே வைத்தால் அது எண்ணெயை உறிஞ்சி அறைக்குள் ஒரு இனிமையான வாசனையை வெளியிடும்.

  • முக்கியமாக அத்தியாவசிய எண்ணெய்களை சிறு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாதவாறு வைத்திருங்கள்.

லாவெண்டர் ரூம் ஸ்ப்ரே:

  • லாவெண்டர் ஒரு வகையான புதிய நறுமணத்தை கொடுக்கும்.

  • ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் சம பங்காக, காய்ச்சி வடிகட்டிய நீர்(Distilled வாட்டர்) மற்றும் தேய்த்தல் ஆல்கஹால்( Rubbing alcohol) ளை நிரப்புங்கள்.

  • அதில் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்யை 10-20 சொட்டுகளைச் சேர்க்கவும் ( உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளுங்கள்).

  • எண்ணெய் மற்றும் நீரை சமமாக பிரிக்க பாட்டிலை நன்றாக குலுக்கிவிடவும்.

  • ஒரு இனிமையான வாசனைக்காக அறையைச் சுற்றி (Spray) தெளித்து விடுங்கள்.

கொதிக்கும் ஸ்டவ்டாப் பாட்போரி(Potpourri):

  • அடுப்பில் ஒரு பானையில் தண்ணீரை கொதிக்க வைப்பதன் மூலமும் சில நேரங்களில் ஒரு இயற்கையான புத்துணர்ச்சியை உருவாக்கலாம்.

  • இலவங்கப்பட்டை, சிட்ரஸ் தோல்கள், கிராம்பு மற்றும் மூலிகைகள் போன்ற நறுமணப் பொருட்களைச் அந்த தண்ணீரில் சேருங்கள்.

  • கலவை வேகும்போது, அது உங்கள் வீடு முழுவதும் ஒரு இனிமையான வாசனையை வெளியிடும்.

இதையும் படியுங்கள்:
மாதச் சம்பளத்தை வாங்கும் ஆண்களுக்கு பேரானந்தம் தருவது என்ன?
Natural fragrances

நறுமணப் பொருட்களின் கூடாரம்:

  • வாசனை மெழுகுவர்த்திகள், நாணல் டிஃப்பியூசர்கள் அல்லது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை கொண்ட செடிகளை உங்கள் வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து பாருங்கள்.

  • நுழைவாயில்களுக்கு அருகில், வாசனை பொருட்களை வைத்தால் உள்ளே வருபவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

  • பெரிய அறைகளில், நல்ல நறுமணத்தை பரவி விட , அறையை சுத்தி எல்லோரும் பொதுவாக விரும்பும் பல வாசனை பொருட்களை வைக்கலாம்.

நம் வீட்டின் வெளியே இருக்கும் தேவையற்ற குப்பைகள், பழைய பொருட்களை அகற்றி கொள்ளுங்கள். தேவைப்பட்டால் நல்ல நறுமணம் தரக்கூடிய பூச்செடி வகைகளையும் வளர்த்துப்பாருங்கள். உங்கள் வீட்டையும் சேர்த்து உங்கள் அருகில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நறுமணம் வீசும். இதனால் உங்கள் இல்லமே புத்துணர்ச்சியால் பூத்து குலுங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com