
ஒரு நாட்டின் குடிமகன் தன்னுடைய நாட்டில் இருந்து பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டுமானால் அதற்கு கண்டிப்பாக பாஸ்போர்ட் முக்கியம்.இதற்காக பலரும் பாஸ்போர்ட் பெற்று வைத்திருப்பார்கள். ஆனால் பாஸ்போர்ட்டிற்கும் எக்ஸ்பைரி தேதி உண்டு. எனவே அதற்கு முன்பாகவே ரினிவல் செய்து வைக்க வேண்டும். சிலருக்கு ஒரு கேள்வி வரலாம். எத்தனை நாட்களுக்கு முன்பு பாஸ்போர்ட்டை ரினிவல் செய்ய வேண்டும் என்று?
இந்தியாவைப் பொறுத்த வரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லைசென்ஸ் பெற முடியும். ஆனால் பிறந்த குழந்தை கூட பாஸ்போர்ட் பெறலாம். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. நீங்கள் ஒரு நாட்டின் குடிமகன் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அதிகாரப்பூர்வ ஆவணம்தான். வெளிநாட்டில் தங்கி படிப்பதற்கு, அங்கு பணி புரிவதற்கு அல்லது அங்கேயே குடியேறுவதற்கும் பாஸ்போர்ட் முக்கியம்.
அதோடு வெளிநாடுகளில் வங்கி கணக்கு தொடங்க இங்கு எப்படி ஆதார் கார்டு பயன்படுகிறதோ, அதேபோல அங்கு பாஸ்போர்ட் தேவைப்படும். அதோடு பயணக் காப்பீடு போன்றவற்றை வெளிநாட்டில் இருப்பவர்கள் பெற வேண்டுமானாலும் பாஸ்போர்ட் அவசியம். இதன் காரணமாக பலர் பாஸ்போர்ட் பெறுகின்றனர்.
பாஸ்போர்ட்டுக்கும் எக்ஸ்பைரி தேதி உண்டு. இது அந்தந்த வயதினரைப் பொறுத்து மாறுபடலாம். எனவே எக்ஸ்பயரி தேதிக்கு முன்னதாக பாஸ்போர்ட்டை ரினிவல் செய்வது முக்கியம். பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதிக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு முன்பு ரினிவல் செய்யப்பட வேண்டும். பாஸ்போர்ட் சேவை விதிகளின் கீழ் ஒரு பெரியவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டால் அதன் செல்லுபடி ஆகும் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதுவே சிறு வயதுடையவர்கள் பாஸ்போர்ட் பெற்றால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரினிவல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அதே சமயம் ஒரு மைனருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டால் அது செல்லுபடி ஆகும் காலம் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே.
பாஸ்போர்ட் ரெனிவல் செய்வதற்கு நீங்கள் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்து அதன் பிறகு பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு வழங்கப்படும் ஃபார்மை நிரப்பி வழங்க வேண்டும். இதற்கு ரூ.1500 முதல் ரூ. 2000 ரூபாய் வரை சார்ஜ் செலுத்த வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டதும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.