உங்கள் குழந்தைகள் அதிகம் மொபைல் போன் யூஸ் பண்ணுறாங்களா... எளிதில் மறக்கடிக்க சில டிப்ஸ்!

உங்கள் குழந்தைகள் அதிகம் மொபைல் போன் யூஸ் பண்ணுறாங்களா... எளிதில் மறக்கடிக்க சில டிப்ஸ்!
Published on

மீபத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் மொபைல் போனிற்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். முந்தைய காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாததாலும், செல்போன் இல்லாததாலும் குழந்தைகள் ஓடி விளையாடுவதும், டிவி பார்ப்பதும் என இருந்தது.

ஆனால் இப்போதைய சூழ்நிலைகள் அப்படி இல்லை. ஆண்,பெண் என இருவருமே வேலைக்கு செல்வதால் குழந்தைகள் போனில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் தற்போது குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்து சமாதானம் செய்கின்றனர்.

இந்த பழக்கம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் என்ன செய்வது என்று கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளர போனை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அது எப்படி சாத்தியம் என்பது தெரியாமல் வீட்டில் தினமும் சண்டை, தகராறு தான் வருகிறது.

போனை வை, அடி விழுகும் என அம்மா கூறுவதும், போம்மா என குழந்தைகள் சொல்வது வழக்கமாகிவிட்டது. பிறந்த சில மாதங்களிலேயே போனில் பாடல் பொம்மை என காட்டி பழக்குவதால் குழந்தைகள் இப்படி மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் சில கேம்களும் அடிமையாக செய்கிறது.

இதனால் எப்படி குழந்தைகளை மாற்ற வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு சில டிப்ஸ் இதோ..

இதை தவிர்க்காமல் கவனித்து செய்யுங்கள் குழந்தைகள் போனை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்

1. உங்கள் மொபைலை குழந்தைகளிடம் இருந்து சற்று தூரத்தில் வைக்கவும். குழந்தைகள் கண்ணுக்கே தெரியாதவாறு மொபைல் போனை வைப்பது நல்லது.

2. குழந்தை மொபைல் பார்கும் போதெல்லாம் அன்புடன் அவர்களுக்கு இதில் உள்ள ஆபத்து குறித்து விளக்குங்கள். குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டுதான் வளர்கிறது. அதனால் இப்படி செல்லமாக அறிவுரை கூறினால் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள்.

3. குழந்தைகள் மொபைல் போன் எடுப்பதை பார்த்தால் அடித்து, திட்டாமல் வேறேதாவது வேலை கொடுத்து பிஸியாகவே வைய்யுங்கள்

4. குழந்தை அழும் போது, சாப்பிடும் போது மொபைலை பார்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள். விளையாட்டு காட்டி சாப்பாடு கொடுங்கள்.

இதை தினமும் செய்தால் போதும் குழந்தைகளிடம் இருந்து மொபைல் போனை மறக்கடிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com