திறந்தவெளியில் மழை பெய்தால் குடை இருக்கிறது! அதுவே வீட்டிற்குள் நிகழ்ந்தால்...?

Rainy Season
Rainy Season
Published on

மழைக்காலம் வந்துவிட்டால் வீட்டிற்கு வெளியே போய் நனைவதைவிட சிலருக்கு வீட்டிற்கு உள்ளேயே நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாமும் என்னதான் சரியான செங்கல், சிமெண்ட் கலவையில் வீடுகளைக் கட்டினாலும், இயற்கையின் மாறுபாட்டால் ஒரு சில விரிசல்கள் ஏற்படலாம். எனவே, அதை எப்படி தற்காலிகமாகத் தடுக்கலாம் என்றும் இதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

ஏன் இந்த நிலைமை?

மழைக்காலத்தில் வீடுகளில் நீர் கசிவு என்பது பல காரணங்களால் ஏற்படும். ஒரு கட்டட அமைப்பில் உள்ள விரிசல்கள் மற்றும் இடைவெளிகள் மூலம் மழைநீர் ஊடுருவுவதே இதன் முதன்மையான காரணம். பின் மோசமான கட்டுமானத் தரம், பழைய தேய்ந்த பொருட்கள், போதுமான பராமரிப்பு இல்லாமை ஆகியவை இந்தப் பிரச்சனையை அதிகப்படுத்தலாம். கூடுதலாக, அடைப்புள்ள சாக்கடைகள், பின் தாழ்வான பகுதிகளில் நிரம்பி வழியும் நீர் போன்றவற்றால் சுவர்கள் மற்றும் கூரைகளுக்குள் கசிவு ஏற்படலாம்.

கூரைகள், ஜன்னல்கள், கதவுகள் மற்றும் அடித்தளங்கள் ஆகியவை நீர்க் கசிவுக்கு மிகவும் சாதகமான பகுதிகள். சேதமடைந்த டைல்ஸ் அல்லது ஓடுகள் கொண்ட கூரைகள், அரைகுறையாக பொருத்தப்பட்ட ஜன்னல்கள், கதவுகள் மற்றும் மோசமான வடிகால் அமைப்புகளைக் கொண்ட அடித்தளங்கள் இவற்றால் எளிதில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அஸ்திவாரம் அல்லது சுவர்களில் உள்ள விரிசல்கள் வழியாகவும் நீர் நுழையலாம், இதுவே ஈரப்பதம் அதிகரித்து பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தற்காலிகமாக எப்படிக் கையாளலாம்?

அதிக மழையின்போது நீர்க்கசிவை தற்காலிகமாக நிர்வகிக்க வீட்டு உரிமையாளர்கள் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். பிளவுகள்(Cracks) மற்றும் இடைவெளிகளுக்கு நீர்ப்புகா சீலண்டுகளை(waterproof sealants) பயன்படுத்துவது தற்காலிகத் தீர்வை வழங்கும். சில சேதங்களால் வீட்டின் பகுதிகள் உடைக்கப்பட்டு வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் பகுதிகளை மூடுவதற்கு தார்பாய்(tarps) அல்லது பிளாஸ்டிக் ஷீட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் உள்ளே நுழைவதை சற்று தடுக்கலாம். சாக்கடைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் சுத்தமாகவும் அடைப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்வது வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்ற உதவும். அஸ்திவாரத்தைச் சுற்றி மணல் மூட்டைகளை வைப்பது நீரின் ஓட்டத்தைத் திசை திருப்ப உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் பெற்றோரா நீங்கள்? எச்சரிக்கை!
Rainy Season

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறினால் என்ன ஆகும்:

நீர் கசிவு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் அவை குறிப்பிடத்தக்க சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஈரப்பதத்தின் நீண்ட கால வெளிப்பாடு கட்டடத்தின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை முற்றிலும் பலவீனப்படுத்தும். சுவர்கள், கூரைகள் மற்றும் தளங்களுக்கு சேதம் விளைவிக்கும். இது பூஞ்சை(mold fungi) வளர்ச்சிக்கு வழிவகுக்கும், மேலும், குடியிருப்பாளர்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். நீர் சேதம் பிற்காலத்தில் அதிக செலவு செய்து பழுது பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும். உங்கள் சொத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும் குறைக்க நேரிடும்.

எனவே, நீர்க் கசிவுக்கான காரணங்களைப் புரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை அதி கனமழையின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாத்து ஒரு பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலைப் பராமரிப்பது அவசியம்.

அடுத்த மழை வருமுன் பாதுகாத்துக்கொள்ளுங்கள் மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com