கலப்படமற்ற வெல்லம் வாங்குவது எப்படி?

How to buy unadulterated jaggery?
How to buy unadulterated jaggery?https://tamil.oneindia.com

நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் பண்டிகை வருகின்ற 15 ந்தேதி வர இருக்கிறது. பொங்கல் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது பொங்கல் செய்யத் தேவையான வெல்லம்தான். சமீபத்தில், ‘பொங்கலையொட்டி வெல்ல ஆலைகளில் கலப்படத்திற்காக வைத்திருந்த 56 டன் சர்க்கரை பறிமுதல்’ எனும் செய்தி நமக்கு கலப்படமற்ற வெல்லம் வாங்குவது எப்படி என்ற விழிப்புணர்வு தந்தது. கலப்படமில்லாத வெல்லம் வாங்குவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வெல்லத்தில் உள்ள சத்துக்கள்: கரும்பிலிருந்து தயாராகும் வெள்ளை சர்க்கரையை விட, வெல்லத்தில் ஆரோக்கிய பலன்கள் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. மனித உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால் வெல்லம் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது. அதோடு உடலை சூடாகவும் வெதுவெதுப்பாகவும் வைத்துக் கொள்ளும் தன்மை வெல்லத்துக்கு இருப்பதால் வெயில் காலங்கள் தவிர்த்து. குளிர்காலத்தில் உணவில் தினமும் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

வெல்லம் எப்படித் தயாராகிறது?: அறுவடை செய்யப்பட்ட கரும்பை சுத்தம் செய்து அரவை எந்திரத்தில் அரைத்ததுக் கிடைக்கும்  கரும்பு பாலை ராட்சதக் கொப்பரையில் ஊற்றி அதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். பதநீர் காய்ச்சும்போது கருப்பட்டி உருவாவதைப் போன்று கரும்பு பாலை காய்ச்சும்போது பாகு உருவாகும். அதனை எடுத்து மற்றொரு கொப்பரையில் ஊற்றி நன்றாகக் கிளறிவிடும்போது வெல்லம் கிடைக்கும். அதனை கெட்டியாக;க் பிடித்து குண்டு வெல்லமாக மாற்றி விற்பனை செய்கிறார்கள்.

கலப்படமற்ற வெல்லத்தை எப்படி கண்டறிவது?: நாம்  வாங்கும் வெல்லம் உண்மையில் கரும்புச்சாற்றில் இருந்துதான் வருகிறதா அல்லது கலப்படமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. நல்ல வெல்லம் என்பது கருஞ்சிவப்பு வண்ணத்தில் சிறிது கெட்டியாக இருக்கும். ஆனால். இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில கரும்பு ரகங்களில் தயாரிக்கப்படும் வெல்லம் வெளிர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எதுவாக இருந்தாலும் முதல் குவாலிட்டி வெல்லமா என்று கேட்டு வாங்க வேண்டும்.

வெல்லத்தை சிறிது எடுத்து கீழே போட்டால் சிறிது நேரத்தில் அது கரைந்து அதை சாப்பிட எறும்புகள் வந்தால் அது நல்ல வெல்லம். உருகாமல் கல்லை போல் தரையில் கிடந்தால் அது ரசாயனம் கலந்த வெல்லம் என்பதை அறியலாம்.

இதையும் படியுங்கள்:
சக மனிதர்களை சரியாகப் புரிந்துகொள்ள சிறப்பான சில வழிகள்!
How to buy unadulterated jaggery?

வெல்லத்தை வாயில் போட்டால் உப்பு சுவையுடன் இருந்தால் அது கேடு தரும் மினரல்ஸ் கலந்த கலப்பட வெல்லம். நல்ல இனிப்பு சுவைதான் நல்ல வெல்லத்தின் அடையாளம். அதேபோல் வாயில் போட்டதும் கரைய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள வெல்லமே நல்லது என ஏமாந்து விடுகிறோம். கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள வெல்லமே கலப்படமற்றது.

வெல்லம் தயாரிக்கும்போது அதில் சுண்ணாம்புத் தூளை சிலர் கலக்கின்றனர். சுண்ணாம்பு தூள் உண்டா இல்லையா என்பதை அறிய வெல்லத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து நீரில் இடுங்கள். வெல்லம் கரைந்ததும் பார்த்தால் சுண்ணாம்புத்தூள் அடியில் படிந்திருக்கும்.

நஞ்சில்லா வெல்லத்தைக் கண்டறிந்து இந்தப் பொங்கலை நலமுடன் கொண்டாடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com