ஐக்கிய அரசு அமீரகத்தில் இந்தியர்கள் அதிக வசிக்கும் நாடு என்றால் அது துபாய்தான். துபாயின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் என்றாலும், துபாய் இன்றும் பிற மதங்கள் சார்ந்தவர்களின் வழிபாட்டு முறைகளை எற்று கொள்கிறது. துபாயில் இந்தியாவில் இருந்து செல்லுத் இந்து மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக அந்த நாட்டில் கொண்டாடப்படுகிறது.
துபாயில் மொத்தம் ஐந்து நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த ஐந்து நாட்களில் என்ன செய்வார்கள் என்று நாம் பார்ப்போம்.
நாள் 1: தந்தேராஸ் (Dhanteras) - 10 November 2023
தீபாவளி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தங்கம்/வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதுடன் தொடங்குகிறது. அலங்கார விளக்குகள், இனிப்புகள் மற்றும் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை வாங்குவதற்கான சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த முதல் நாள் சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். மக்கள் இனிப்புகள் முதல் தங்கம்/வெள்ளி நகைகள் வரை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளை வாங்குகிறார்கள்.
நாள் 2: சோட்டி தீபாவளி (Choti Diwali) - 11 November 2023
தீபாவளிக்கு முந்தைய நாளான தீபாவளி திரு நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வர். வீட்டில் பாரம்பரிய இனிப்புகள் தயாரிப்பது, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பது, பரிசுகளைப் பகிர்வது ஆகிய நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடக்கும். வீடுகள் மற்றும் கட்டிடங்களை மின்விளக்குகளால் அலங்கரிப்பார்கள்
நாள் 3: தீபாவளி (Diwali) - 12 November 2023
தீபாவளி அன்று பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்து கொண்டு அங்கு உள்ள கோவில்களுக்குச் செல்வார்கள். பின்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆடி பாடி கொண்டாடுவர். துபாயில் வீடுகளில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. இருப்பினும், எமிரேட்ஸின் வானவேடிக்கைகளால் வானமே ஒளிர்வதைக் காணலாம்.
துபாயில் திகைப்பூட்டும் தீபாவளி வானவேடிக்கைகளைக் காணச் சிறந்த 4 இடங்கள்;
புர்ஜ் கலீஃபா
அல் சீஃப்
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்
தி பாயின்ட் பாம் ஜுமேரா
நாள் 4: கோவர்தன் பூஜை (Govardhan Puja) - 13 November 2023
தீபாவளிக்கு மறுநாள், இந்துக்கள் கிருஷ்ணருக்குச் சிறப்புப் பூஜை நடத்தி வழிபடுவார்கள். லங்கர்கள் நகரம் முழுவதும் நடத்தப்படுகின்றன, இந்துக்கள் தங்கள் வீடுகளில் சமைத்த சைவ உணவுகளை வழங்குவார்கள். பல இந்திய உணவகங்களில் அன்றைய தினம் சிறப்பு மெனுக்கள் தயாரிக்கப்படுகின்றன.
நாள் 5: பாய் தூஜ் (Bhai Dooj) - 14 November 2023
பாய் தூஜ் என்பது உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுக்கான நாள். சகோதரி தனது சகோதரனுக்கு இனிப்புகளை வழங்குவதும், அதற்குப் பதிலாக, சகோதரர் தனது சகோதரிக்குப் பரிசுகளை வழங்குவது மற்றும் அவளைப் பாதுகாப்பதாகச் சபதம் மேற்கொள்வது இந்த நாளின் சிறப்பு.