நவரத்தினக் கற்களை வாங்கும்போது எப்படிப் பரிசோதித்து வாங்குவது? போலி என்பது எப்படித் தெரியும்? தெரிஞ்சுக்குங்க…

நவரத்தினக் கற்களை வாங்கும்போது எப்படிப் பரிசோதித்து வாங்குவது? போலி என்பது எப்படித் தெரியும்? தெரிஞ்சுக்குங்க…
Published on

நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த நவரத்தினக் கற்கள் வாங்க நினைப்பவர்கள், வாங்க விரும்புபவர்கள் முதலில் தரமான நல்ல வியாபாரியைத் தேர்வு செய்ய வேண்டும். நவரத்தினக் கற்களில் நான்கு சி முக்கியம் என்பதுதான். அதன் தரத்துக்கு அடிப்படை ஆதாரம். Carat (Weight), Clarity (Grade), Colour, Cute ஆகிய நான்கு ‘சி க்கள்தான் நவரத்தினக் கற்களை உயர்த்திப் பிடிக்கக்கூடியவை. சென்னை ஜெம்மாலிக்கல் இன்ஸ்டிடியூட்டில் தந்து, அவைகள் நவரத்தினக் கற்களா எனத் தெரிந்துகொள்ளலாம். எடை மற்றும் ஜாதிக் கற்கள் குறித்தும் அங்கு அறிந்துகொள்ளலாம்.

இவைகளைத் தவிர அந்த நவரத்தினக் கற்களின் தரத்தினை நிர்ணயிப்பதும், அதனை விரிவாக எடுத்துரைப்பதும் மிகவும் அனுபவம் மிக்க வியாபாரியால்தான் முடியும். தகுதியும் திறமையும் கொண்ட அந்த வியாபாரியால்தான் அடையாளம் கண்டு வெளிப்படுத்த முடியும். மிகவும் அனுபவம் வாய்ந்த வியாபாரி, கண் பார்வையிலேயே குறிப்பிட்ட நவரத்தினக் கற்களின் தரத்தை அறிந்துகொள்வார்.  நவரத்தினக் கற்கள் வாங்குவோர், தகுதியுள்ள வியாபாரியின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். கற்கள் பழுதின்றி, பூரிப்புடன் இருக்க வேண்டும். பூரிப்பான நவரத்தினக் கற்கள் எப்போதும் விலை குறையாது. மார்க்கெட்டில் அதன் விலை ஏறுமுகமாகவே இருக்கும். நவரத்தினக் கற்களில் போலி என்பதனை, அதனை வாங்க விரும்பும் சாதாரண மனிதர்களால் காண இயலாது. அனுபவம் மிக்க வியாபாரிகளால்தான் போலி எது என்பதனை எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com