சரியான ஃபவுண்டேஷன் பிரஷை எப்படி தேர்வு செய்வது?

சரியான ஃபவுண்டேஷன் பிரஷை எப்படி தேர்வு செய்வது?

ன்றைய காலகட்டத்தில் மேக்கப் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபவுண்டேஷன், கிரீம் என பல பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வருகின்றன. மேக்கப் சிறப்பாக இருப்பதற்கு, அதற்கான சிறந்த பொருட்களைத் தேர்வு செய்வது அவசியம் ஆகும். குறிப்பாக, நீங்கள் மேக்கப் செய்வதற்கு பயன்படுத்தும் பிரஷ்களில் கவனம் செலுத்துவது அவசியம். முகத்தில் ஃபவுண்டேஷன் போடும்போது அதற்குப் பயன்படுத்தும் பிரஷ் சரியில்லை என்றால், எதிர்பார்த்த லுக்கை பெற முடியாது. எனவே, ஃபவுண்டேஷனுக்குத் தேவையான பிரஷை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். அவற்றை எப்படித் தேர்வு செய்யலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இயற்கையாக தயாரிக்கப்படும் பிரஷ்: இயற்கையாக தயாரிக்கப்படும் இந்த வகை பிரஷ்கள் அணில், பன்றி மற்றும் ஆட்டு முடிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் மென்மையானது என்பதால் இதன் தூரிகைகள் விரைவில் உதிர்ந்துவிடும். அதேபோல, இந்த பிரஷை சுத்தம் செய்வதும் கடினம். நீங்கள் ஃபவுண்டேஷனுக்கு கிரீமைப் பயன்படுத்தாமல் பவுடர் பயன்படுத்துபவராக இருந்தால், இயற்கை பிரஷை தேர்வு செய்வது நல்லது.

செயற்கையாக தயாரிக்கப்படும் பிரஷ்: இவ்வகை பிரஷ்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. இதில் பயன்படுத்தப்படும் இழைகள் செயற்கையானவை. மலிவாகக் கிடைக்கும் இந்த பிரஷ்களை சுத்தம் செய்வது எளிது. இயற்கை தூரிகைகள் போல இது விரைவில் உதிர்ந்து போவதில்லை.

ஸ்பாஞ்ச் பிரஷ்: ஃபவுண்டேஷன் போடுவதற்கு முன்பு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தும் நபராக இருந்தால், இந்த ஸ்பான்ச் பிரஷ் பயனுள்ளதாக இருக்கும். அந்தத் தருணத்தில் ஃபவுண்டேஷன் போடும்போது ஸ்பான்ச் பிரஷ் ஒரு அடித்தளமாக அமைகிறது. ஆனால், இந்த பிரஷை பயன்படுத்தியதும் உடனடியாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இது ஈரப்பதத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது.

ஓவல் பிரஷ்: ஓவல் பிரஷ்கள் ஒருவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. பார்ப்பதற்கு ஓவல் வடிவில் தூரிகையைக் கொண்டிருக்கும் இந்த பிரஷின் கைப்பிடி நீளமாக இருக்கும். இதனால் ஃபவுண்டேஷன் போடும் முறையை எளிதாக்குகிறது. முகத்தை பளபளப்பாக வைக்க இந்த பிரஷை பயன்படுத்தலாம். முகத்தில் உள்ள வளைவுகளில் இவ்வகை பிரஷ்கள் சிறப்பாக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பிளாட் பிரஷ்: ஃபவுண்டேஷனுக்கு கிரீம் பயன்படுத்துபவர்கள் இந்த பிளாட் பிரஷை பயன்படுத்தலாம். உங்கள் முகத்துக்கு முழுமையான ஃபவுண்டேஷன் பெற இந்த பிரஷ் உதவியாக இருக்கும். ஏனெனில், இது ஃபவுண்டேஷனை சீராகப் பரப்ப உதவுகிறது.

இப்படி, உங்களுடைய பயன்பாட்டுக்கு எந்த வகை பிரஷ் சரியாக இருக்குமோ அதைத் தேர்வு செய்து வாங்குவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com